"வர இருக்கின்ற CTA பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வாய்திறக்கவில்லை."




நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு போட்டி போட்டு அனுதாபச் செய்திகளை வெளியிடுகின்ற
எந்தவொரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரும் CTA தொடர்பாக எந்த அறிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ இதுவரையில் வெளியிடவில்லை.

தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற தொணியில் அரசாங்கும், நாட்டு மக்களை அடக்குவதற்காக அமுல்ப்படுத்தப்படுகின்ற ஒரு சர்வாதிகார சட்டமூலம்தான் இந்த பயங்கரவாத சட்டமாகும். இச் சட்டத்தின் ஊடாக அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுப்பதோடு மாத்திரமல்லாது அப்போராட்டங்களில் ஈடுபடுகின்ற நபர்களை பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதுமாகும். இதுமாத்திரமல்லாது ஒரு பொலீஸ் அதிகாரி #சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் எப்போதும் இப் பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைக்கலாம் என்ற பொறுப்பற்ற அதிகாரங்களை பொலீஸுக்கு வழங்கியும் உள்ளது.

09.10.2018 ல் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம் பிடித்த சட்டமூலம்தான் இப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம். அதேபோல் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற அவசரகாலச் சட்டத்தைப் போன்ற அல்லது அதற்கு ஒப்பான சட்டமூலமாக பயங்கரவாதச் சட்ட மூலம் துறைசார்ந்தவர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

பொதுவாக அரசங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு வழங்காத மக்களுக்கு எதிராக இப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு ஜனநாயகத்தை கேள்விக்குற்படுத்துகின்றன.

1. சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பு உண்டு என சந்தேகத்தின் அடிப்படையில் யாரும் எப்போதும் பிடியாணை இன்றி ஒரு சாதரண பொலீஸ் அதிகாரியால் கைது செய்யப்படலாம்.

2. நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்த முன்னர் தடுப்புக்காவலில் வைக்கக் கூடிய உச்ச காலம் 72 மணித்தியாலங்கள். அதேபோல் தடுப்புக்காவல் உத்தரவுடன் உச்சகாலம் 3 மாதங்களாக இருக்க முடியும் அத்துடன் 18 மாதங்கள் வரை நீடிக்கவும் முடியும்.

3. பாதுகாப்பு அமைச்சர் தடுப்புக்காவல் உத்தரவை வழங்கலாம்.

4. நீதிபதி ஒருவரின் உத்தரவின்றி பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும்.

5. பொலீஸாருக்கு வழங்கப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் உள்ளது.

6. அமைச்சர் எந்த ஒரு பொது இடத்தையும் தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கலாம்.

இதனால் இலங்கைப் பிரஜைகளாகிய எமது குடியியல்சார் உடிமைகளும் அதனுடன் இணைந்த அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படும் என்பதனை மக்களாகிய நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறான சர்வாதிகாரச் சட்ட மூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமது பிரதிநிதிகளுக்கே பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன அவர்களே பாராளுமன்றத்தில் இச்சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும். இத்தருணத்தில் கடந்தகாலச் செயற்பாடுகளை(மாகாண எல்லை நிர்ணயம்)  வைத்து அவதானிக்கும் போது பல சந்தேகங்கள் எமக்குள் எழுகின்றன.

1. CTA தொடர்பான பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தை வாசித்து உள்ளடக்கத்தை அறிந்திருப்பார்களா?

2. அல்லது கடந்த காலங்களைப் போன்று பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்திவிட்டு மக்கள் முன்வந்து "எங்களைத் தாக்க வந்தார்கள்" எங்களால் எதுவும் செய்ய முடியாது போனது என்று கோமாலித்தனமாக கூறப்போறார்களா?

3. பொறுப்பற்ற வேறு ஏதும் கருத்துக்களை கூறப்போகிறார்களா?

இவற்றுக்கு மத்தியில், 

13.03.2019 அன்று நியூஸிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு தங்கள் தங்கள் அனுதாபச் செய்திகளை நீயா நானா என்று போட்டிபோட்டு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நியூஸிலாந்து விடயம் எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத நிகழ்வுதான் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இன்னுமொரு நியூசிலாந்துச் சம்பவம், உருவாக்கப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக இலங்கையில் நடந்துவிடக்கூடாது என்றுதான் அங்கலாய்க்கின்றோம்.

[MLM- Suhail]
"வர இருக்கின்ற CTA பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வாய்திறக்கவில்லை." "வர இருக்கின்ற CTA பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வாய்திறக்கவில்லை." Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.