அருனி பபா மற்றும் தெல் சூட்டி கைதுபாதாள உலக குழு உறுப்பினர் குடு ரொஷானின் மனைவி ´அருனி பபா´ மற்றும் ´தெல் சூட்டி´ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கிடைத்த தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 1.7 மில்லியன் ருபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குடு ரொஷானின் றாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் உள்ள இரண்டு வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை வீட்டில் வைத்து ´தெல் சூட்டி´ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் கடவத்தை வீட்டில் வைத்து 02 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஐஸ் 100 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அருனி பபா மற்றும் தெல் சூட்டி கைது அருனி பபா மற்றும் தெல் சூட்டி கைது Reviewed by Madawala News on March 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.