கிழக்கு மாகாண ஆளுநரினால் வீடு மற்றும் மலசல கூடம் அற்றோருக்கான காசோலைகள், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும்.
(எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்)
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வறுமைக் கோட்டின் கீழ் வீடு மற்றும் மலசல கூடமின்றி வாழ்ந்து வரும் மக்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் நேற்று (24) பிற்பகல் 02.00 மணிக்கு ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.யூசுப் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண  ஆளுநர் கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  ஆளுநராக பதவியேற்று முதன் முறையாக  ஏறாவூருக்கு வருகை தந்திருந்தார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.சுபைரினால்  வீடு மற்றும் மலசல கூடமின்றி இனங்காணப்பட்ட 54 பேர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கிழக்கு மாகாண  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்  வழங்கி வைத்தார். மற்றும் 14 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும்  ஆளுநர் அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.அஸீஸ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் என்.நெடுஞ்செழியன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எஸ்.ஜௌபர்,  எஸ்.எம்.கமால்தீன், எம்.எம்.சாஜித் ஆகியோரும் கலந்து  கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநரினால் வீடு மற்றும் மலசல கூடம் அற்றோருக்கான காசோலைகள், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும். கிழக்கு மாகாண ஆளுநரினால்  வீடு மற்றும் மலசல கூடம் அற்றோருக்கான காசோலைகள்,  விளையாட்டு உபகரணங்கள்  கையளிப்பு நிகழ்வும். Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.