"தேசிய,சர்வேதச இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளே CTA உருவாக்கத்தில் முஸ்லீம்களை பீதியடையச் செய்துள்ளன."PTA என்ற அதே கறுப்பு நிற கொடிய விலங்கே, சர்வதேச சட்ட விதிகள் என்ற மாயையுடன்
CTA வாக தனது நிறத்தை மாற்றி கொடிய விலங்காகவே வரப்போகிறது.


"தேசிய,சர்வேதச இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளே CTA உருவாக்கத்தில் முஸ்லீம்களை பீதியடையச் செய்துள்ளன."


PTA தமிழர்களுக்கானதோ அதேபோல் CTA முஸ்லீம்களுக்கானதோ அல்ல ஏனென்றால் இலங்கையில் நடைமுறையிலிருக்கின்ற, புதிதாக உருவாக்கபடவிருக்கின்ற முறையே PTA, CTA சட்டமும், சட்டமூலமும் இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் எதிரானதே தவிர குறித்த ஒரு இனத்துக்கானது அல்ல என்பதனை எமது விழிப்புணர்வுகளில் நாம் இணைத்துக்கொள்ளவும் வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்நாட்டின் தமிழ் மக்கள் என்பதனால் PTA தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் என்று பிழையாக சிலரால் அடையாளப்படுத்தப்படுகிறது. குறித்த PTA சட்டத்தினால் இந்நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் முஸ்லீம்களும் பல்வேறாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எவ்வாறு PTA அதிகமாக தமிழ் மக்களை பதம்பார்த்ததோ அதேபோல் தற்போது உருவாக்கப்படுகின்ற சட்டமூலமான CTAவானது ஆளும் அரசாங்கத்தை தவிர மற்ற எல்லோரையும் இன,மத பேதமின்றி ஒடுக்கப்போகிறது என்பதுதான் உண்மை.இதனால் உருவாக்கப்படுகின்ற CTA வை எந்தவொரு இனம்சார்ந்த ஒன்றாக நாம் சித்தரித்துக்காட்டுவதைவிட இந்த நட்டுமக்களை பாதிக்கின்ற சட்டமூலமாகவே நாம் விழிப்பூட்ட வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

அதேபோல் நடைமுறையில் இருக்கின்ற PTA சட்டத்தினால் அதிகமான தமிழ் மக்கள் அனுபவித்த சொல்லொன்னா துயரங்களை மீண்டும் புதிய CTA  சட்ட மூலத்தால் தொடர்ந்தும் அனுபவிப்பார்கள் என்பதனை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு ஏனைய இனத்தவர்களும் சமவளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகுவார்கள் என்பதே இதிலுள்ள எமது வெளிப்படையான புரிதலாகும்.

பயங்கரவாத தடை/எதிர்ப்புச் சட்டங்களிலுள்ள சரத்துக்கள் ஆளும் அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை மேலோங்கச் செய்து நாட்டு மக்களை திட்டமிட்டு ஒடுக்குவதாகவே அமைந்திருக்கின்றன.  தேசிய,உலகலாவிய ரீதியில் ஏற்படுத்தப்படுகின்ற இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளினால் உருவாக்கப்படவுள்ள CTA புதிய சட்ட மூலம் இந்த நாட்டு மக்களிலுள்ள முஸ்லீம்களை அதிகமாக குறிவைக்கும் என்பதே எமது அனுமானமாகும்.

[MLM - சுஹைல்]
"தேசிய,சர்வேதச இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளே CTA உருவாக்கத்தில் முஸ்லீம்களை பீதியடையச் செய்துள்ளன." "தேசிய,சர்வேதச இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளே CTA உருவாக்கத்தில் முஸ்லீம்களை பீதியடையச் செய்துள்ளன." Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.