DIG லத்தீப் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உயர் நீதி மன்றில் மனு தாக்கல்



டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான சூரியவெவ பகுதியை சேர்ந்த ஏ.டபிள்யூ சிறியானி என்பவரே இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது வெளிநாட்டில் உள்ள மாகந்துர மதூஷ் என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் அடிப்படையற்ற விதத்தில் செயற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறும் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
DIG லத்தீப் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உயர் நீதி மன்றில் மனு தாக்கல் DIG லத்தீப் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உயர் நீதி மன்றில் மனு தாக்கல்  Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.