சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்ட வாய்ப்பு.


தற்போதைய அரசாங்கத்தின் மக்களுக்கு விரோதமான வரவு செலவுத்திட்டத்தை
தோற்கடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறே தனது ஆட்சியின் போது எடுத்த கடன்களுக்கு சரிசமனான அபிவிருத்திகளை செய்ததாகவும் இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தின் கடன்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுப்பதை காணக்கூடிய விதத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்ட வாய்ப்பு.  சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்ட வாய்ப்பு. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5