கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்கும் ..



கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம்
எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்குமென என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.

1992-1993 ஆம் ஆண்டு 28  பிரதேச  செயலகங்களை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான வர்த்தமானியும்   வெளியிடப்பட்டது. 

இதனையடுத்து 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டு அவற்றுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டபோதும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படாது அதிகாரங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டது. 

இது பாரதூரமான  குற்றம். அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை ,நீதி  மறுக்கப்பட்டுள்ளது. தமிழினம் தனது நிர்வாகத்தை ,நிதி அதிகாரத்தை ,காணி அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாதென திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக இந்த சபையிலுள்ள ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்கும் .. கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம்  எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்கும் .. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.