இலவச கல்விச் சேவையில் ஓர் மைல்கல்.


சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சகோதர சகோதரிகளே,


சமூக முன்னேற்றம் என்பது சமூகத்திலுள்ள சகலரும் (ஏழை, பணக்கார வித்தியாசமின்றி) கல்வியில் முன்னேற்றம் அடையும் போதுதான் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற உண்மையை நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். நமது சமூகம் பல துறைகளில் அபிவிருத்தி அடைந்திருந்தாலும் கல்வியில் இன்றும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. பல சிறார்கள் கல்வியிலிருந்து இடைவிலகி சிறு வயதுகளிலே தொழிலாளிகளாக ஆகி விடுகிறார்கள். இதன் விளைவு நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

இதனை இல்லாதொழித்து சகல சிறார்களும் கல்வியின் பயனை அடைந்து உடல் உள ரீதியாக ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளாக உருவானால் இன்று எமது சமூகம் முகங் கொடுக்கும் பல பிரச்சினைகளுக்க தீர்வு கிடைத்திருக்கும்.
எனவேதான் எபிக் அமைப்பு கடந்த 17 வருடங்களாக தன்னிடமுள்ள வளங்களை பிரயோகித்து கல்வியில் எமது சமூகம் எந்தளவுக்கு முன்னேற்றம் காண உதவ முடியுமோ அந்தளவுக்கு முடியுமான சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது.

எபிக் அமைப்பினூடாக பல குடும்பங்கள் ஏழை, பணக்கார வித்தியாசமின்றி பயனடைந்துள்ளார்கள்,  பயனடைந்து கொண்டு வருகின்றார்கள். பல ஏழை குடும்பங்களிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பல சிறார்கள் மூலம் அக்குடும்பங்களின் வறுமையை இல்லாதொழித்திருக்கின்றோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நாங்கள் மௌனமாகவே சேவை செய்கின்றோம் அத்துடன் செய்த சேவைகளை விளம்பரப்படுத்துவதுமில்லை, அதனூடாக ஆதாயம் தேடுவதுமில்லை. எங்களுக்காக கூலி தர அல்லாஹ்வே போதுமானவன்.இருந்த போதிலும் காலத்தின் தேவைகருதி எம் சமூகத்திற்கு எம் அமைப்பினால் வழங்கப்படும் இலவசக் கல்வி அம்மாணவர்களை உரிய முறையில் சென்றடைந்திருக்கின்றதா என்பதை மக்கள் மன்றத்தின் முன் வைக்கவேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் உண்டு ஆதலினால்தான் இம்முறை எம்மாணவர்களின் பெறுபேறுகளை உங்களின் முக் பகிரங்கப்படுத்துகின்றோம். இது எமது அமைப்பின் பிரபல்யத்தைவேண்டியல்லாமல் மாணவர்களை ஊக்குவிக்கும் ஓர் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

உங்களது குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி இலவசமாக சேவையாற்றிவரும் எங்களது ஆசிரிய ஆசிரியைகளை நன்றியுடன் நினைவு கூறுங்கள்.
அவர்களின் சந்ததிகளும் இச்சேவைகள் மூலம் பயன்பெற வேண்டி இறைவனிடம் கையேந்துங்கள். மறுமையில் இறைவனால் வழங்கப்படுகின்ற பரிசைத்தவிர இவ்வுலகில் அவர்களுக்காக அளிக்கப்படுகின்ற எந்தவொரு பாராட்டுகளும் பரிசில்களும் ஈடாகாது.

வழமைபோன்று இம்முறையும் சுமார் 21 பேர் க.பொ.த (சா.த) பரீட்சை எழுதி அனைவரும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் அத்தோடு அதில் 5 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எபிக் கல்வியகத்தின் வெற்றிக்காக உழைத்த மற்றும் உழைத்துக்கொண்டிருக்கின்ற சகல தோழர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் எங்களது நன்றிகள்.

,

ஜெம்ஸித் ஹஸன்.
செயலாளர்,
EFIC கல்முனை
இலவச கல்விச் சேவையில் ஓர் மைல்கல். இலவச கல்விச் சேவையில் ஓர் மைல்கல். Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.