சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் வாக்குகளை பெறக்கூடியவரே வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போட்டியிடுவராயின்
அவர் மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் அவர், கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹாலி-எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கூட்டணி அமைத்ததன் பின்னர், அனைத்து மக்களினதும் ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும்.

கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர், சின்னம் குறித்து கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளலாம்.

எனினும், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் வாக்குகளை பெறக்கூடியவரே வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் வாக்குகளை பெறக்கூடியவரே வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் வாக்குகளை பெறக்கூடியவரே வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும். Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.