எமது சேர்வர்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படவில்லை.


உலகின் முன்னனி நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற Facebook, Instagram & WhatsApp
ஆகிய சேவைகள் நேற்று (13.03.2019) உலகின் பல இடங்களில் இயங்க மறுத்துள்ளது. உலகின் அனைத்துப் பரவலான இடங்களிலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மட்டும் இயங்க மறுத்தாலும் இந்தியா, பங்களாதேஸ், ஆர்ஜன்டினா போன்ற நாடுகளில் வட்சப் கூட இயங்கவில்லை என்பதுடன், கலிபோர்னியா போன்ற பல பகுதிகளில் பேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு சேவையான Oculus உம் இயங்கவில்லையென பயனாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செயலிகள் மற்றும் இணையத்தளங்கள் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்போது பயனாளர்கள் தமது கருத்ததுக்களை, முறைப்பாடுகளைப் பதியவும் அவை தொடர்பான தகவல்களை வழங்கவும் இயங்குகின்ற Down Detector சேவையானது, திடீரென நேற்று புதன் கிழமை பேஸ்புக் மற்றும் அதன் இதர சேவைகள் இயங்க மறுத்துள்ளதாக உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் இருந்தும் முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும், பிரேசில் நாட்டில் இருந்து அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது. மேலும் அவர்களிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 34%  ஆனவர்கள் Login செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்குவதாகவும் 33%ஆனவர்களிற்கு Newsfeed இல் பிரச்சினை இருப்பதாகவும் 31% ஆனவர்களிற்கு இற்கு எதுவுமே இயங்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றது.

காரணம் என்ன?
பல தரப்புக்களில் இருந்தும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பேஸ்புக் தரப்பானது Major Outageபிரச்சினையே இதற்குக் காரணம் என தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது .

இருந்தும் பதிவேற்றி சில நேரங்களின் பின்னர்  இதற்கு Outage  பிரச்சினையே காரணம் மற்றபடி எந்தவிதமான Ddos தாக்குதல்களும் நடத்தப்படவில்லையெனவும் தமது டிவிட்டினை மாற்றி அமைத்துள்ளார்கள்.

எது எப்படியோ குறித்தி பிரச்சினை தொடர்பாக தமது நிறுவனம் மும்முரமாக இயங்கி வருவதாகவும், வெகு சீக்கிரம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நள்ளிரவு முதல் உலகின் பல இடங்களில் மீண்டும் பேஸ்புக்கின் சேவைகள் வழமைக்குத் திரும்பினாலும் இன்னம் சில இடங்களில் நிலைமை அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.  இதேபொன்று சிக்கல்கள் இதே மார்ச் மாதத்தில் மார்ச் 4ம் மற்றும் மார்ச் 5ம் திகதிகளில் பேஸ்புக் நிறுவனம் எதிர்நோக்கியுள்ளதாகவும் Down Detector சேவை நிறுவனம் தகவலளிக்கின்றது.

முன்னனி சமூக வலைத்தளமான பேஸ்புக் தமது நிலைமையை அறிவிக்க வேறொரு சமூக வலைத்தளத்தை(Twitter) நாடியுள்ளமை வெகுவாக நையாண்டி செய்யப்படும் வேலையில் ஏற்கனவே தகவல் திருட்டு போன்ற பல குற்றச் சாட்டுக்களினால் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள பேஸ்புக் நிறுவனம் நிலைமையை கூடிய சீக்கிரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் நிலைமை இதைவிட மோசம் அடையலாம் எனவும் பொருளியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றர். இதே வேளை பயனாளர்களின் அனைத்துத் தகவல்களையும் amazon போன்ற மூன்றாந் தரப்பு நிறுவனங்களிற்கு விற்றதில் பேஸ்புக்க் நிறுவனத்தின் மீது Criminal குற்றச்சாட்டு பதிவாக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ 1.52 பில்லியன் மக்கள் தினமும் பேஸ்புககைப் பாவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

Thank You!

Aathil Ahamed
Bsc. of Information Systems (Reading)
Bsc. of Information Technology (Reading)
எமது சேர்வர்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. எமது சேர்வர்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.