“டிரெபிக் ஜேம் “ காரணமாக தங்கள் வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிடும் கொழும்பு மக்கள் ..



நாட்டில் தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள்
போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு வருவதாக அண்மையில் ஒரு தகவல்கள் குறிப்பிடுகின்றது. 


இங்கே, போக்குவரத்து வசதிகள் இருந்தும், வாகன நெரிசல்கள் காரணமாக இந்த நிலை இம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம், வடக்கு மாகாணத்திலே – குறிப்பாக வன்னிப் பகுதியிலே எமது மக்கள் போக்குவரத்து வசதிகளின்மை காரணமாக தங்களது வாழ்நாளில் பல வருடங்களாக வீதிகளில் நடந்தே காலத்தைக் கழித்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், சுமார் 124 பாடசாலைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைக்குச் செல்வதற்கென போக்குவரத்து வசதிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களும் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை அடைந்து வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு சாலையினால் அதிகளவிலான வருமானங்களை ஈட்டுவதாகக் கூறும் நிலையில் வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் போதிய அக்கறை காட்டாத நிலைமை தொடர்ந்து கொண்டே வருகின்றது என்றும் தெரிவித்தார்.

எனவே, வன்னிப் பகுதியில் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊடான போக்குவரத்துச் சேவைகளை பொதுப் போக்குவரத்துச் சேவை என்ற அடிப்படையில், விரிவுபடுத்துவதற்கும், அதிகரிப்பதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம், இந்த நாட்டின் இரயில் பாதைகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளை ஊடறுத்தே செல்கின்றன. குறிப்பாக, கொழும்பு, கோட்டை இரயில் நிலையத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டால், வடக்கு நோக்கி காங்கேசன்துறை வரை செல்கின்ற பாதை, பதுளை, மாத்தளை, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அவிசாவளை,  தலைமன்னார் வரை செல்கின்ற பாதைகள் அனைத்துமே தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளின் ஊடாகவே செல்கின்றன என்ற கருத்தையும் அவர் மேலும் தெரிவித்தார்.
“டிரெபிக் ஜேம் “ காரணமாக தங்கள் வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிடும் கொழும்பு மக்கள் .. “டிரெபிக் ஜேம் “ காரணமாக தங்கள் வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிடும் கொழும்பு மக்கள் .. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.