சம்மாந்துறை மண்ணின் பெண் ஆளுமைகள் கௌரவிப்பு.


(அகமட் எஸ். முகைடீன்) 
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை மனிதநேய நற்பணிப் பேரவை, தமிழா ஊடக வலையமைப்பு மற்றும் இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் ஆகியன இணைந்து நடாத்திய சம்மாந்துறையின் துறைசார் பெண் முதன்மைகள் மற்றும் பெண் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வும் 'பெண்கள் முதன்மைகளும் எழுத்தாளர்களும்' நூல் வெளியீடும் மனிதநேய நற்பணிப் பேரவையின் மகளிர் வலுவூட்டல் பிரிவு ஆலோசகரும் ஓய்வுபெற்ற அதிபருமான அபீரா சலீம் தலைமையில் இன்று (30) சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மொழித்துறை பதில் தலைவருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. மன்சூர், மனிதநேய நற்பணிப் பேரவை மற்றும் இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான இர்ஷாத் ஏ. காதர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இஸ்ஸதீன், மகளிர் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்ஸா, தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட சகல துறைகளிலுமுள்ள 25 பெண் முதன்மைகள் மற்றும் 14 பெண் இலக்கிய ஆளுமைகளும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கொரவிக்கப்பட்டனர்.


சம்மாந்துறை மண்ணின் பெண் ஆளுமைகள் கௌரவிப்பு. சம்மாந்துறை மண்ணின் பெண் ஆளுமைகள் கௌரவிப்பு. Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.