“மாதத்துக்கொரு வேலை” எனும் தொனிப்பொருளின் கீழ் அடிப்படை வசதிகளற்ற, வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவி.


- Abdul Kareem
மாவத்தகம பிரதேச சபை ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் முவாத் fபாரூக் அவர்களது சொந்த நிதியில்
மாவத்தகம பிரதேசத்துக்குள் வசிக்கும் அடிப்படை வசதிகளற்ற, வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் அவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டமான “மாதத்துக்கொரு வேலை” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தமது இன்னுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் வசதியற்ற, தையல் திறமையுள்ள குடும்பமொன்றுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் முவாத் fபாரூக் அவர்களது சொந்த செலவில் தையல் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் கீழ் தாம் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்ததைபோன்று பிரதேசத்தின் வசதி குறைந்த குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பத்தேவையான வசதிகளை எவ்வித பேதங்களுமின்றி தாம் வழங்கவுள்ளதாக இந்நிகழ்வின்போது முவாத் fபாரூக் அவர்கள் தெரிவித்தார்.

இதற்கு முன் இவ்வாறான 07 குடும்பங்களது இளைஞர்களை சொந்த செலவில் வெளிநாடு அனுப்பிவைத்தமையும் இங்கு சமூகம் தந்திருந்த உரிய இளைஞர்களின் பெற்றார் ஒருவர் இங்கு தெரிவித்திருந்தமையும் விசேட அம்சமாகும்.


Dr. Fazl-Ul Haque M. Fouze
“மாதத்துக்கொரு வேலை” எனும் தொனிப்பொருளின் கீழ் அடிப்படை வசதிகளற்ற, வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவி. “மாதத்துக்கொரு வேலை” எனும் தொனிப்பொருளின் கீழ் அடிப்படை வசதிகளற்ற, வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவி. Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.