ரகசியமாக இயங்கும் அடிப்படைவாத குழுவொன்றினால் மூன்று அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்ரகசியமாக இயங்கும் அடிப்படைவாத குழுவொன்றினால் மூன்று அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குமாறும் மூன்று சிரேஷ்ட அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினதிடம்   கோரியுள்ளதாக தேஷய நாளிதழ் முன்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசியல் வாதிகளுக்கு அடிப்படைவாத குழுவினால் மரண அச்சுருத்தல் நிலவுவதாக முறையிடப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென பாதுகாப்பு தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்பில் இயங்கும் இந்த ரகசிய அடிப்படைவாத குழு நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை மக்களிடையை இனரீதியாக  முருகல் ஏற்படுத்த திட்டமிட்டு இயங்கிவந்துள்ளமை இலங்கை அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த குழுவின் முக்கிய 4 நபர்களை புலனாய்வு பிரிவினர் தற்போது இனங்கண்டுள்ளதாகவும் அவர்கள் மிக ரகசியமாக பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என  தெரியவந்துள்ளது.

அட்டாளைச்சேனை , பொலன்னறுவை , மாவனல்லை , புத்தளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  இந்த குழுவுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் சிறு  அசம்பாவித சம்பவங்களை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் குறித்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசியமாக இயங்கும் அடிப்படைவாத குழுவொன்றினால் மூன்று அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ரகசியமாக இயங்கும் அடிப்படைவாத குழுவொன்றினால் மூன்று அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5