ஜனாதிபதி கொலை சதி ! முன்னாள் புலி உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சந்தித்தது ஏன் ?(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய
ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில்  சந்­தேக நப­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்­பிலும்  நேற்று பல முக்­கிய விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.  

குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் புலி உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தரப்பு சந்­தித்­த­தாக கூறப்­படும் நிலையில், அச்­சந்­திப்பு தொடர்­பி­லான தக­வல்கள் நேற்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் சட்­டத்­த­ரணி  அஜித் பத்­தி­ர­ணவால் நீதி­மன்றில் முன்­வைக்­கப்­பட்­டன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர அறிந்­தி­ருந்த நிலை­யி­லேயே புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து நாலக சில்வா தரப்பு சந்­தித்­த­தா­கவும், கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மி­டப்­பட்ட சம்­பவம் ஒன்று தொடர்பில் இடம்­பெற்ற இர­க­சிய விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் ஒரு அங்­க­மா­கவே அந்த சந்­திப்பு இருந்­த­தா­கவும்  சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண சுட்­டிக்­காட்­டினார்.  

விசா­ர­ணை­களை தமது சேவை பெறு­ந­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவே முன்­னெ­டுத்­த­தா­கவும், அதன் அறிக்­கையை அவர் பொலிஸ் மா அதி­ப­ரிடம் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும், அவ்­வ­றிக்கை பிர­காரம் மேல­திக நட­வ­டிக்­கைகள் பல பொலிஸ் மா அதி­பரால்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது அவர் சுட்­டிக்­காட்­டினார். 

அந்த  சந்­திப்பில் புஷ்­ப­ரா­ஜுடன் பேசப்­பட்ட விட­யங்கள் என்ன என்­பது தொடர்பில் அச்­சந்­திப்பின் முழு­மை­யான ஒலி வடிவ பதிவை சி.ஐ.டி.யின­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள­தா­கவும், அதனால் புஷ்­ப­ரா­ஜுடன்  கலந்­து­ரை­யா­டி­யதை கொலை சதிக்­கான ஆதா­ர­மாக காட்­டு­வது எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண கூறினார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்­யவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸ்ஸை கொழும்பில் வைத்து கொலை செய்­யவும்  சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் வழ­க்கு விசா­ர­ணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தன. 

சி.ஐ.டி. சார்பில் அதன் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணை  தொடர்­பான பொலிஸ் பரி­சோ­தகர் இக்பால் மற்றும் சார்ஜன்ட் ரத்னபிரிய ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

கடந்த  6 ஆம் திகதி நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய கடந்த 19 ஆம் திகதி சி.ஐ.டி.யால் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட, இவ்­வி­வ­கா­ரத்தின் சந்­தேக நப­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு எதி­ரான சாட்­சியங்கள் குறித்த அறிக்­கையை மைய­ப்ப­டுத்தி அவ­ரது சட்­டத்­த­ரணி  வாதங்­களை முன்­வைத்தார்.

அந்த சாட்­சியங்கள் சுருக்க அறிக்­கையில் 8 பிர­தான கார­ணி­களும் 16 உப கார­ணி­களும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான சான்­று­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் அவை அனைத்­தையும் மறுத்த சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண அதில் எதுவும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க சான்­றாக இல்லை என வாதிட்டார்.

 குறித்த சி.ஐ.டி. அறிக்­கையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின்  2(1) அ,ஊ மற்றும் 3 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்த ஏது­வான சான்­றுகள் உள்­ள­தாக  சி.ஐ.டி. குறிப்­பிட்­டுள்ள போதும் அவ்வாறு எதுவும் இல்லை என சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.  

தனது சேவை பெறுநரான நாலக சில்வா கைது செய்யப்பட முன்னர் சி.ஐ.டி.க்கு வழங்கிய 5 நாள் வாக்குமூலத்தை சி.ஐ.டி. ஏன் நீதிவானுக்கு சமர்ப்பிக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர் அதில் அத்தனை கேள்விகளுக்குமான பதில்களும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். 
ஜனாதிபதி கொலை சதி ! முன்னாள் புலி உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சந்தித்தது ஏன் ? ஜனாதிபதி கொலை சதி ! முன்னாள் புலி உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சந்தித்தது ஏன் ? Reviewed by Madawala News on March 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.