சிவனொலிபாத மலைக்கு ஏறும்போது சுகயீனமுற்ற பெண் உயிரிழப்பு.


மொனராகலைப் பகுதியில் இருந்து, சிவனொலிபாத மலைக்கு, நேற்று  (23) யாத்திரை மேற்கொண்ட
பெண்ணொருவர், மாடைப்புக் காரணமாக, உயிரிழந்துள்ளார் என்று, நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலையைச் சேர்ந்த கருணாவதி ( வயது 63) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் மலை உச்சிக்கு செல்லும் போது, அதிகாலை 2.30 மணியளவில் சுகயீனமுற்றதாகவும்  மலை அடிவாரத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியின் மூலம் கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்ததாகவும்  நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களில், சிவனொளிபாத மலைக்கு வந்தவர்களில் மூவர் உடல்நல  குறைவுகாரணமாக மரணித்துள்ளனர் என்றும் எனவே, சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள், தங்களது உடல்நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டுமென்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவனொலிபாத மலைக்கு ஏறும்போது சுகயீனமுற்ற பெண் உயிரிழப்பு. சிவனொலிபாத மலைக்கு ஏறும்போது சுகயீனமுற்ற பெண் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.