படிக்க வேண்டிய காலத்தில் காதலிக்கின்றார்கள்படிக்க வேண்டிய காலத்தில் காதலிக்கின்றார்கள் என ராஜாங்க அமைச்சர் பாலித
தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் -21- உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

படிக்கும் போது காதலிக்கின்றார்கள், காதலிக்கும் வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர், திருமணம் செய்ய வேண்டிய வயதில் விவகாரத்து பெற்றுக் கொள்கின்றனர்.

இளம் வயது திருமணங்களினால் நாட்டில் அதிகளவில் விவகாரத்துக்கள் பதிவாகின்றன.

எனது வீட்டுக்கு வரும் பலர் இள வயதில் திருமணம் செய்து கொண்டு விவகாரத்துச் செய்து கொண்டவர்களாவர்.

தேசிய அடையாள அட்டையில் விவாகமானவரா இல்லையா என்பது பற்றி குறிப்பிடப்பட வேண்டும்.

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பல திருமணங்களை முடித்துக் கொள்ளும் சம்பவங்களும் பதிவாகின்றன எனவும், இந்தக் குற்றச் செயலுக்கு சட்டத்தின் ஊடாக 1500 ரூபா அபராதம் மட்டுமே விதிக்கப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க வேண்டிய காலத்தில் காதலிக்கின்றார்கள் படிக்க வேண்டிய காலத்தில் காதலிக்கின்றார்கள் Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.