சிறையில் இருக்கும் மகனுக்கு பெற்ற தாய் ஒருவரின் "பரிசு " இது.


போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.

“மகனை நல்வழிப்படுத்துவதற்கு முன்மாதியாக இருக்கவேண்டிய தாய் இவ்வாறு நடந்துகொள்ளலாமா? போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவருக்கு மீளவும் போதைப்பொருளை எடுத்துச் சென்று வழங்குவது மகனை குற்றம் செய்யத் தூண்டுவதாகவே உள்ளது” என்று எச்சரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரான வயோதிப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


சந்தேகநபரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பார்வையிடச் சென்ற அவரது தாயார்,  புகையிலை நறுக்குக்குள் சிறியளவு ஹெரோயின் போதைப் பொருளைச் சுற்றி அதனை வாழைப்பழத்துக்குள் நுட்பமாகச் செலுத்தி எடுத்துச் சென்றுள்ளார். வாழைப்பழத்தை சோதனை செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் சுற்றப்பட்ட புகையிலை நறுக்கை மீட்டுள்ளனர்.

சிறையில் இருக்கும் மகனுக்கு பெற்ற தாய் ஒருவரின் "பரிசு " இது. சிறையில் இருக்கும் மகனுக்கு பெற்ற தாய் ஒருவரின் "பரிசு " இது. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.