வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் அசத்தல் சாதனை.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளும் அதற்கு மேலும் பெற்ற
மாணவர்களை உள்ளடக்கி நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் மாகாண ரீதியாக இடம்பெறவுள்ள போட்டியில் பங்குபற்ற தெரிவாகியுள்ளனர்.

கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இம்மாணவிகள் வலய மட்டத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த எஸ்.ஏ.பாத்திமா அப்றா, ஜே.ஜுமைனா ஹானி ஆகிய இரு மாணவிகளுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியைகளான கே.ஆர்.எப்.இஸாரா மற்றும் திருமதி எப்.எப்.முனாஸ்தீன் வகுப்பாசிரியர் எம்.சீ.எம்.றியாஸ் ஆகியோர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் அசத்தல் சாதனை. வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் அசத்தல் சாதனை. Reviewed by Madawala News on March 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.