வாழைச்சேனை ஆயிஷாவில் இரு மாணவிகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர்
வலய மட்ட விளையாட்டுப்
போட்டியில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மாகாண ரீதியில் நடைபெறவுள்ள போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (12) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் அகமட் பரீட் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் எம்.எஸ்.நிப்ருல் ஜுஹி எனும் மாணவி உயரம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தையும் ஏ.எப்.நிப்லா எனும் மாணவி 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துத் தந்துள்ளதோடு அவ்விருவரும் மாகாண ரீதியாக இடம்பெறவுள்ள போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவிகளுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர்.எம்.இர்பாத், எம்.எம்.எம்.அஸ்மின் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளதாக அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை ஆயிஷாவில் இரு மாணவிகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு. வாழைச்சேனை ஆயிஷாவில் இரு மாணவிகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு. Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5