ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி அவர்களின் முன்னிலையில் அல் - ஹாஜ் ரிஸ்வி முப்தி வழங்கிய உறுதிமொழி.


இலங்கையின் முன்னணி இஸ்லாமிய மத அமைப்பான அனைத்து இலங்கை ஜாமியதுல் உலமா சபை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் போதைப்பொருளை ஒழிப்பதற்கெதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளிற்கு தம்முடைய சிறந்த ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்தது.


 மேல் மாகாண ஆளுநர் எம். அசாத்  எஸ். சாலி அவர்களின் முன்னிலையில் ஜாமியதுல் உலமா சபையின் தலைவர் அல் - ஹாஜ் ரிஸ்வி முப்தி இந்த உறுதிமொழியை வழங்கினார்.


இச் சந்திப்பானது ஜாமியதுல் உலமா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.


மேல் மாகாணத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கெதிராக ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பாராட்டிய ரிஸ்வி போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முஸ்லிம் சமூகத்தினர்களிடையே இன்னும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார். இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்சினையை குறைக்க உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


முஸ்லிம் பாடசாலைகளில் திறமையான இஸ்லாமிய மதகுருக்கள் இல்லாததால் முஸ்லிம் மாணவர்கள் சமயக் கல்வியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


முஸ்லிம் பள்ளிகளுக்கு மௌலவி ஆசிரியர்களை நியமிப்பது  தொடர்பில்  ஜாமியதுல் உலமா சபை தலைவர் கூறிய கருத்துக்களிற்கு ஆளுநர் பதிலளிக்கும் போது  இது தொடர்பாக தான் விழிப்புடன் இருப்பதாகவும், இரண்டு வாரங்களுக்குள் கல்வி அமைச்சின் உதவியுடன் நியமனத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அப்பாவி இளைஞர்கள் போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ளனர். அந்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுடன், பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளிக்கப்படவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் போதைப்பொருளை நாட்டிலிருந்து அகற்றுவதற்கு தனது முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக  மக்கள் ஒத்துழைக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.



ஜாமியதுல் உலமா சபையானது சமூகத்திற்கு சிறந்த  சேவைகளை ஆற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க தகுதிவாய்ந்த இஸ்லாமிய அமைப்பால் மட்டுமே முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.



ஜாமியதுல் உலமா சபையின் “அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்குதல், இலவச பாடசாலை உபகரணங்கள் விநியோகம், பாடசாலை சீருடை புத்தகப்பைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை தகுதிவாய்ந்த ஏறத்தாழ அரை மில்லியன் மாணவர்கள்பெற்று நன்மையடைந்துள்ளதாக விளக்கக்காட்சியின் ஊடாக அறியமுடிந்நது.



 சேய்க்களான எம். எஸ்.எம். தசிம், எம்.எம்.ஏ. முபாரக் மற்றும் ஏ.எல்.எம். கலீல் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

- ஆளுனரின் ஊடக பிரிவு -
ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி அவர்களின் முன்னிலையில் அல் - ஹாஜ் ரிஸ்வி முப்தி வழங்கிய உறுதிமொழி. ஆளுநர் எம். அசாத்  எஸ். சாலி அவர்களின் முன்னிலையில் அல் - ஹாஜ் ரிஸ்வி முப்தி வழங்கிய உறுதிமொழி. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.