கண்டியில் அதிகரித்து வரும் அபாயகரமான விபத்துக்கள்.
விபத்து என்பது விரும்பதகாத தேவையற்ற எதிர்பாராத நிகழ்வாகும்.
வீதி    வீதிகளில் வாகனங்கள் வாகனங்களுடன் மோதுவதும்,  வாகனங்கள் மனிதர்களுடன் அல்லது சொத்துக்களுடன் மோதுவதாலும் ஏற்படுகின்றன

இதன் அடிப்படையில் 2014 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக கண்டி பொலிஸ் திணைகளத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அறிக்கையின் படி கண்டி பொலிஸ் வலையமைப்பிற்குட்பட்ட 2014 இல் 1949 விபத்துக்களும் 2015ஆம் ஆண்டில் 2203 விபத்துச் சமபவங்களும் 2016 ஆம் ஆண்டில் 2220 விபத்துக்களும் 2017 இல் 1183 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன  .


இது தொடர்பாக கண்டி  வீதி தொடர்பு அதிகாரிகளிடம் வினவிய போது  அவர் கூறியவாவது இப்புள்ளி விபரங்கள் விபத்துக்களின் குறிப்பிட்;டாலும்
இவ் விபத்துக்களுக்கான காரணங்களில் அதிக பங்காளிகளாக இருப்பவர்கள் சாரதிகளாகும் நாட்டில் அதிகரித்துள்ள வீதி  விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுபற்ற நடத்தையும் வீதி ஒழுங்கை பேணாமையும் கவனயீனமும்  மது போதையில் அவசரமாக அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதும் பிரதானமான காரணமாக உள்ளது எனவும்,


 அவை தவிர வீதி ஒழுங்கு தொடர்பாக அறிவின்மை வீதியின் தன்மை நிலைமையை அறியாமை காலநிலமை தன்மையை தெரிந்து கொள்ளாமை வாகனத்தின் சாதக பாதக நிலைமையினை கணடுகொள்ளாமை மற்றும் அவற்றை பரிட்சிக்காமை மனித தவறுகள் மனப்போராட்டங்கள் மற்றும் மன அழுத்ததுடன் வாகனம் செழுத்துதல்  வீதியில் நடத்தல்  வீதியின் புணரமைப்பின் நிலமையை தெரிந்து கொள்ளாமை திட்டமிடபடாத பயணத்தை தேற்கொள்ளல் சாரதிகள் குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தை செலுத்துதல் வீதி சமிஞ்சைகளை கவனத்தில் கொள்ளாமை பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாக பேணாமை போன்ற பல்வேறு காரணங்களாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன என குறிப்பிடுகின்றனர் .


முன்னய அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் வீதி அபிவிருத்தி முக்கியமானதாகும் அந்த வகையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு குறைந்து சென்றாலும் அபாயகரமான விபத்துக்கள்; 2017 ஆம் ஆண்டில் அதிகரித்த செல்பதை காணலாம் .


வீதி விபத்துக்களை தடுப்பதற்பான இவ்வாறான பல நடவடிகிகைகள் மோட்டார் வாகான போக்குவரத்துத் திணைக்களத்தினாலும்  வீதி போக்குவரத்துத் பிரிவு பொலிசாராலும் முன்னெடுக்கப்படுகின்றன போதிலும் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால் இந் நடவடிக்கையிலுள்ள தவறுகள் வலுக்கள் எவையென ஆராயப்படுவது முக்கியமாகும் அது மாத்திரமன்றி வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையென்றால் அத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதும் அம் மாற்றங்களினுடாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதும் அவசியம் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பாகும் தொடர்சியான அறிவுட்டல்  நடவடிக்கைகள் தொடரப்படுவதன் மூலமே வீதி  விபத்துக்களை தடுக்க முடியும்
சமகாலத்தில் கொலையென்றும் தற்கொலையென்றும் விபத்துக்கள் என்றும் இடம் பெறும் ஏற்று கொள்ள முடியாத நிகழ்வுகளினால் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபொய் கொண்டிருக்கின்றன.


அல்லது பறியெடுக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. பெறுமதிமிக்க மனித உயிர் இவ்வாறான காரணங்களால் குறிப்பாக விபத்துக்களினால் தினமும் பறிக்கப்படுவதும் தடுக்கபடுவதும் தவிர்கப்படுவதும் அவசியமாகும்
எதிர்கால கனவுகள் பலவற்றுடன் நிகழ்காலத்தை நகர்த்திச் செல்லும் பாதசாரிகளும் : வாகனங்களில் பயணிப்போரும் வாகான சாரதிகளும் என பல தரப்பினர் அன்றாடம் இடம் பெறும் வீதி விபத்துக்களுக்கு ஆளாகி காயப்படுவதையும் அங்க உறுப்புக்களை இழந்து அங்கவினமாவதையும் மீள பெற முடியாத இன்னுயிர்களை இழப்பதையும் காண்கின்றோம்.ஏனவே போக்குவரத்துச் சட்டத்தை நடைமுறைபடுத்துகின்;றவர்களும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளும் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படுகின்ற போது விபத்துக்களைத் தவிர்த்து உயிர் இழப்புககைளையும் சொத்திழப்புக்களையும் தவிர்த்து கொள்ள முடியும்.

-FAZNA FAIZ-
MADAWALA
UTJCSL


கண்டியில் அதிகரித்து வரும் அபாயகரமான விபத்துக்கள். கண்டியில் அதிகரித்து வரும் அபாயகரமான விபத்துக்கள். Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.