A9 இல் கவிழ்ந்த 'பட்டா'


பரந்தன் கிளிநொச்சி பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளகியுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இச்சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. சாரதி எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார் ஆயினும் உதவியாளர் சிறுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிசாரின் துரித செயற்பாட்டினால் வாகனப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ARN - Maruthamunai.
A9 இல் கவிழ்ந்த 'பட்டா' A9 இல் கவிழ்ந்த 'பட்டா' Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.