கண்ணீரால் கொண்டாடப்படும் சர்வதேச தண்ணீர்த் தினம்.


கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்தின் மஸ்ஜித் தாக்குதலால் உலகமே கண்ணீரில் மூழ்கி ஒரு
வாரம் கடந்து இன்று (2019/03/22 வெள்ளிக் கிழமை)உலக தண்ணீ(நீ)ர் தினம் கொண்டாடப்படுகிறது. நாகரீகங்கள் நீரை அண்டிய பிரதேசங்களிலே நிமிர்ந்து நின்றன.

ஒரு கிராம் தங்கத்தை விட ஒரு மிடறு தண்ணீர் பெறுமதியானது என்பது. தாகத்தில் இருப்பவனுல்குத் தெரியும். உலகை ஆளும் அதி சக்திவாய்ந்த கனியவளம். செல்வந்த நாடு என்ற அளவீட்டுக் குறிக்குள் #நீர் பிரதான இடம் பிடிக்க இன்னும் வெகு நாட்கள் தேவையில்லை.

உலகம் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதனின் உடலிலும் சுமார் 75% நீர்தான். நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியம். அதே போல் நம் சுற்றுப்புறம் தூய்மையுடன் அமையவும் நீர் இன்றியமையாதது.

ஒரு மனிதனின் உடலில் 42லீட்டர் தண்ணீர் உள்ளது. அதில் 2.7லீட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதாக இருந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்னும் அளவிற்கு அதன் தேவை அதிகம்.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் இறப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது.

புவியை விட வேறு கிரகங்களில வாழ முடியுமா? என்ற ஆய்வுகள் பல கோடி டாலர்கள் செலவில் செய்யப்பட்ட போதிலும்  யுக முடிவு வரை வெற்றியளிக்காது. இவ்வளவும் செலவு செய்தது நீர் வளம் காணப்படிகிறதா ? இல்லையா? என்பதற்காகவேயன்றி வேறில்லை.

தெரிந்தோ, தெரியாமலோ சூழலைச் சீர்கேடுகளுக்குள்ளாக்குவதின் மூலமாக நமக்கு நாமே எதிரிகளாகி வருகிறோம். வரலாற்று ஏடுகளின் வாயிலாக அப்போதைய மன்னர்கள் ஊர் தோறும் குளம் வெட்டினார்கள். சாலையோரங்களில் மரம் நட்டார்கள்.

நாம் மலைகளையும், நிலங்களையும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து வருகிறோம். பெளதீகத்தின் பெருங்கொடையான நீருக்கு மாற்றோர் நெருங்கிய பதிலீடு  உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டு பிடிப்பார்களா என்றால் அது பெரும் கேள்விக் குறி.நிலம், நீர், காற்று போன்றவற்றை நாம் பல்வேறு வழிகளில் மாசுபடுத்துவதின் காரணமாக புவியை தொடர்ந்து வெப்பமுறச் செய்து வருகிறோம். இச்செயல் மனிதகுலம் தனக்குத்தானே தவணை முறையில் செய்து கொள்ளும் தற்கொலையே ஆகும். கற்கால மனிதர்கள் சிந்தித்த அளவுக்கு கம்பியூடர் கால மனிதர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். இலங்கையின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33% தூய குடிநீர் கிடைப்பதில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நீரை சிக்கனமாப் பயன்படுத்தும் கலையையும், சேமிக்கும் தொழில்நுட்பத்தை திட்டமிடுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

A Raheem Akbar
2019/03/22
கண்ணீரால் கொண்டாடப்படும் சர்வதேச தண்ணீர்த் தினம். கண்ணீரால் கொண்டாடப்படும் சர்வதேச தண்ணீர்த் தினம். Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.