ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கிராம மட்டத்திலிருந்து எழுச்சி பெறச் செய்வோம்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கிராம மட்டத்திலிருந்து எழுச்சி பெறச் செய்வோம் எனும் கருத்திட்டத்திற்கமைவாக
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர் ஒன்று வவுனியா நகரமண்டபத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜெயசேகர அவர்களின் பங்குபற்றுதலுடன   வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் அரசியல்  வருகையின் பின்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது வன்னி மாவட்டத்தில் துரித வளர்ச்சி பெறுவதை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம்  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிராம மட்டத்திலிருந்து திட்டவரைபுகள் மூலம் கட்சியை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தை தாம் முன்னெடுக்கப்போவதாகவும், எத்தடைகள் வந்தபோதிலும் கட்சியை கைவிட்டு விடாமல் வன்னி மாவட்டத்தில் அதனை மென்மேலும்  வளர்தெடுக்க திடசங்கற்பம் பூணுவதற்கு கட்சித்தொண்டர்கள், ஆதரவாளர்களாகிய நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்  சேனக்க அபயகுணவர்தன மற்றும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின்  உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்,வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கிராம மட்டத்திலிருந்து எழுச்சி பெறச் செய்வோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கிராம மட்டத்திலிருந்து எழுச்சி பெறச் செய்வோம். Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.