(படங்கள்) ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மடவளை மதீனா பழைய மாணவர்களது முயற்சியால் மாணவர்களுக்கு ரகர் விளையாட்டு .


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களது
முயற்சியால் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ரகர் விளையாட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இதன் ஆர்மப கட்டமாக இன்று மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வொன்று பாடசாலையின் அதிபர் ஜனாப் அஸனார் ரஹீம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை விமானப்படை ரகர் வீரரும் பயிற்றுவிப்பாளருமாகிய சமிந்த குமார பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மாணவர்களின் உடலியக்க மற்றும் ஆளுமை விருத்தி சார் செயற்பாடுகளை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.


 ஆரோக்கியமான, ஒழுக்கம் மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் செய்தியும் இந்த நிகழ்வின் ஊடாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவரும் பாடசாலை அபிருத்தி சங்க உறுப்பினருமாகிய அல்ஹாஜ் நாஜிம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ரஸூக் மற்றும் நளீம், மதீனா தேசிய பாசாலை பழைய மாணவர் சங்க ஆஸ்திரேலிய கிளையின் ஒருங்கினைப்பாளர் ரியாஸ், கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் முன்னால் ரகர் வீரர் நஸ்ரி மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(படங்கள்) ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மடவளை மதீனா பழைய மாணவர்களது முயற்சியால் மாணவர்களுக்கு ரகர் விளையாட்டு . (படங்கள்) ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மடவளை மதீனா  பழைய மாணவர்களது முயற்சியால் மாணவர்களுக்கு ரகர் விளையாட்டு . Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.