தேசிய ரீதியில் கண்ணைக்கரிக்கும் தூசு.. றிசாட் பதியுதீன்.!


நாடுபூராகவும் இன்று ஹைலைட் ஆகியுள்ள ஒரு மனிதர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவர் றிசாட் பதியுதீனாக மாத்திரமே இருக்கமுடியும்.

தன் வாழ்நாளில் எண்ணிப்பார்த்திராத, செய்திராத ஒரு குற்றத்துக்காக, இனவாதிகளினால் தூக்கிப்பிடிக்கப்பட்டு தேசிய ரீதியாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுவரும் அகோரம் சில நாட்களாக அரங்கேறிவருகிறது.

அகதியாக வெளியேறி அதில் இருந்து புடம்போட்ட ஒரு தலைவன் தன்னுடன் கூடவே நிர்க்கதியான மக்களின் தேவைகளை தேடிச்சென்று தேற்றிவருவதும்,90 களில் வாழ்ந்த மக்கள் தம் சொந்த வாழிடங்களில் மீளக்குடியேறக் கேட்பது குற்றமாக பார்க்கப்படுவதும் இலங்கையின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால்தான்.

இதில் ஒரு படி மேலாகச் சென்று இந்த ஆர்ப்பாட்டங்களில் “இலங்கையை பாதுகாப்போம்” அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் வழிப்படுத்தலில் பல்கலைக்கழக மாணவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை கற்ற சமூகமும் சேர்ந்து தேசிய ரீதியில் கெளரவ அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு சேறுபூசும் நடவடிக்கையாகவே நோக்க வேண்டிக்கிடக்கிறது.

மாத்திரமன்றி இந்நாள் , முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர், ஜே.வி.பி தலைவர் உருவ பொம்மைகளும் பேசுபொருளாக்கப்படுகின்றமை, அமைச்சர் றிசாட் அவர்களிளின் களங்கத்தை துடைத்துவிட்ட இவர்களும் இந்த நாட்டிலே குற்றவாளிகள் என்பதனை கட்டியம் கட்டிக்கூறும் செயற்பாடாக காணக்கிடைக்கிறது.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடும்போக்கு சிந்தனையாளர்கள் வெகுண்டெழுவது கண்டும் எமது முஸ்லிம் சமூகம் கண்விழியாது, இன்னும் இன்னும் பேசா மெளனிகளாக இருப்பதானது தேசியத்தில் எமக்கு ஆபத்து விளைவிக்க வல்லது. 

ஷிபான் BM
மருதமுனை.
தேசிய ரீதியில் கண்ணைக்கரிக்கும் தூசு.. றிசாட் பதியுதீன்.! தேசிய ரீதியில் கண்ணைக்கரிக்கும் தூசு.. றிசாட் பதியுதீன்.! Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.