12 மில்லியன் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்ட மடவளை மதீனா விளையாட்டு மைதானம்.. அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் வெகு விமர்சையாக திறந்து வைப்பு.


மடவளை மதீனா பாடசாலை விளையாட்டு மைதானம் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின்
நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் இன்று (30) திறந்துவைக்கப்பட்டது.

எச்.எம்.எம். ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக இருந்தபோது இந்த விளையாட்டு மைதானத்துக்கு 4 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் ரவூப் ஹக்கீம் தனது நகர திட்டமிடல் அமைச்சின் மூலம் மேலதிகமாக 8 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மடவளை மத்திய குழுவின் வேண்டுகோளுக்கிணங்க 12 மில்லியன் ரூபா செலவில் இந்த மைதானம், புற்கள் நடப்பட்டு அழகுற அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்திலேயே விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மைதான திறப்பு விழாவை முன்னிட்டு, ரவூப் ஹக்கீம் சம்பியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நடாத்தப்பட்டது. அதன் இறுதிப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிண்ணங்களை வழங்கிவைத்தார். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்தியகுழுவினால் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

அண்மையில் இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு தெரிவான சிராஸ் சஹாபும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கட்சியின் மடவளை மத்தியகுழு உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
12 மில்லியன் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்ட மடவளை மதீனா விளையாட்டு மைதானம்.. அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் வெகு விமர்சையாக திறந்து வைப்பு. 12 மில்லியன் ரூபா செலவில் மேம்படுத்தப்பட்ட மடவளை மதீனா விளையாட்டு மைதானம்..  அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் வெகு  விமர்சையாக திறந்து வைப்பு. Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.