2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம்.


2018ல் O/L செய்த மாணவிகளை  ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும்  A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம்.

2018ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளையும் அதற்கு முன்னர் தோற்றிய மாணவிகளையும் கலைத்துறையில் 2020 ஆம் ஆண்டிலேயே ஒரு வருடத்துக்கு முன்னரே க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தயார்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழக வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் திட்டமே இவ்விசேட செயற்திட்டமாகும்.

ஏன் இச்செயற்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்? 
1. ஒரு வருடத்துக்கு முன்னரே A/L பரீட்சையை        முடிப்பதற்கான வாய்ப்பு

2. கலைத்துறையில் அதிக பல்கலைக்கழக பாடதெரிவுகளை செய்வதற்கு ஏற்றவாறான பாடங்கள் (அரசறிவியல், புவியியல், இஸ்லாமிய/இந்து நாகரீகம்)

3. கலைத்துறை கற்கும் மாணவிகளுக்கு அத்துறையில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டு, நம்பிக்கையுடனும் எதிர்கால இலக்கை அடைந்து கொள்வதற்கான வழிகாட்டகள்

4. தலைசிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதற்கான எவ்வித அவசியமும் அற்ற கற்பித்தல் செயற்பாடுகள்

5. திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சையை மையப்படுத்திய கற்றல், கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் Library ஏற்பாடுகள்

6. சிறந்த/இஸ்லாமிய சூழலில் வதிவிட வசதியுடன் முழுநேரக் கற்கை

7. நடைமுறை இஸ்லாம் (தர்பியா, அஹ்லாக், தஜ்வீத்) தொடர்பான பயிற்சிகளும்  வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான விசேட வழிகாட்டல்களும்

8. வினைத்திறன்மிக்க முறையில் உற்சாகத்துடன் தொடர்ந்து கற்றலில் ஈடுபடுவதற்கும் சுயகற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கும் உளவள ஆலோசனைகள் (Counselling and Motivation)

9. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஏற்பாடுகள்

மேற்படி விசேட அம்சங்களைக் கொண்ட இச்செயற்திட்டத்தில், க.பொ.த உயர்தரத்தில் கலைத்துறையை தெரிவுசெய்யவிருக்கும் மாணவிகள் இணைந்து கொள்வதனூடாக வெற்றிகரமான எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக ஏனைய துறைகளைப் போன்று கலைத்துறையிலும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுவதோடு, சிறந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும்  கல்வித் துறையில் உயர்நிலையை அடைந்துக்கொள்வதற்கும் ஆரம்ப தகைமையாகக் கருதப்படும் பல்கலைக்கழக பட்டம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கிறது. அத்துடன் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியினைத் தொடர்வதற்கான ஆரம்பத் தகைமையைப் இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.


கலைத்துறையில் கற்கும் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள்

பல்கலைக்கழக வாய்ப்புகளுடன் ஏனைய அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் பலதரப்பட்ட வாய்ப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தில் சட்டம், சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், முகாமைத்துவம், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம், Architecture, Fashion Design, Tourism, Event Management, City and Country Planning, Entrepreneurship, Information Technology போன்ற துறைகளில் தங்களது கற்கைகளை தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது.


திறந்த பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரிகள், மற்றும் பல அரச கல்வி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு ஈடான பல கல்வி மற்றும் தொழிட் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் கலைத்துறை மாணவர்களுக்கு காணப்படுகின்றது. பொதுவாக கலைத்துறையில் காணப்படும் பாடங்கள் ஒப்பீட்டளவில் இலகுவாகக் கணப்படுவதால் பல்கலைகழகத்துக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழில் வாய்ப்புகள் 

அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், துறைசார் ஆலோசகர்கள் போன்ற அரச உயர் பதவிகளை பெற்று கொள்வதற்கான வாய்ப்பும் கலைத்துறை மாணவர்களுக்கு காணப்படுவதுடன் பல்வேறுபட்ட துறைகளில் விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது வடிவமைப்பாளர்கள், நகர திட்டமிடுபவர்கள் போன்ற தொழிற்துறைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பட்டம் ஒன்றினைப் பெற்று அல்லது தங்களது A/L ல் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று தங்களது தொடர்பாடல் திறனுடன் ஆங்கில அறிவையும் கனணி அறிவையும் மேம்படுத்திக் கொள்வதனூடாக தனியார் துறையிலும் அதிக தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இத்திறன்களை விருத்தி செய்துகொள்வதற்கான விசேட ஏற்பாடுகளும் இச்செயற்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது தீர்மானம் 

தங்களது ஆரம்ப இலக்கு 'பல்கலைக்கழகம் நுழைதல்' என்று தீர்மானித்திருக்கும் மாணவிகளுக்கும், காலத்தை வீணடிக்காது 2020லேயே A/L இல் சித்தியடைந்து அதனூடாக உயர் தொழிற்தகைமை அல்லது கல்வித் தகைமையைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்திருக்கும் மாணவிகளுக்கும் மிகச் சரியான தெரிவாக இருப்பது Emerald Ladies College இன் 2020 விசேட கலைச்செயற்திட்டமாகும். சிறந்த சூழலில் வதிவிட வசதியுடன் முழுநேரக் கற்கையாக இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் முழு அவதானத்தையும் தங்களது இலக்கில் குவித்து இலகுவாகவும் உறுதியாகவும் இலக்கை அடைந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் மாணவிகளுக்கு கிடைக்கின்றது.

Emerald Ladies College – அறிமுகம்

2014ஆம் ஆண்டு Emerald Ladies College என்ற பெயரில் மாணவிகளை மையப்படுத்திய பாடநெறிகளை நடாத்தும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது மாணவிகளுக்கான டிப்ளோமா பாடநெறிகள், க.பொ.த உயர்தர கலைத் துறை முழுநேர கற்கைநெறி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) EDHat International நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கணணி பாடநெறிகளையும் நடாத்திவரும் ஒரு கல்வி நிறுவனமாகும்.


இந்நிறுவனம் கடந்த 05 வருடங்களில் அகில இலங்கை ரீதியில் மாணவிகளின் மத்தியிலும், குறிப்பாக பெற்றோர்களின் மத்தியிலும் அதிக வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக மாறியிருக்கிறது. தற்போது ஆறு கிளைகளுடன் இயங்கிவரும் இந்நிறுவனம் எதிர்வரும் காலங்களின் பல மாற்றங்களுடன் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையிலான புதிய பகுதிகளையும் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான திட்டடங்களுடன் செயற்பட்டு வருகின்றது.


அத்துடன் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் A/L இனையும் அறிமுகப்படுத்தி பல ஆய்வுகளுக்குப் பின் மேற்படி விசேட செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 2018ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் குழுவினரைத் தயார்படுத்தி 80% மாணவிகளை சித்தியடையச் செய்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு, பல்கலைக்கழக வாய்ப்பை உறுதிபடுத்தும் வகையில் விசேட கற்றல் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்ததப்படுகின்றது.


பாடநெறி தொடர்பான முழுவிபரங்களையும் 0777 71 71 29 உடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.    
2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம். 2018ல் O/L செய்த மாணவிகளை  ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும்  A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம். Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5