நேர்முகப் பரீட்சை தொடர்பான முறைப்பாடு.


தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இளைஞர் யுவதிகள் இலவச வெளிநாட்டு பயணத்தை
மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் திட்டம் ஒன்று அமுலில் உள்ளது.

குறித்த புலமைப்பரிசிலுக்கு ஒவ்வொரு வருடமும் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளரூடாக அதி கூடிய புள்ளிகளை பெறும் 8 பேர் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவர்.

குறித்த புலமைப்பரிசிலுக்கான நேர்முகத் தேர்வு கடந்த மாதம் 21.02.2018 அம்பாறை மாவட்ட காரியாலயத்தில்நடைபெற்றது. குறித்த நேர்முகத்தேர்விற்கு அக்கரைப்பற்றிலிருந்து நான் உட்பட 3 இளைஞர்களும் மாவட்டத்திலிருந்து தகுதி பெற்ற 21 இளைஞர்கள் பங்குபற்றி இருந்தனர்.

நேர்முகத் தேர்வு நடைபெற்று இரண்டு நாட்கள் பிற்பாடு பெறு பேறுகளின் அடிப்படையில் என்னுடைய பெயரும் 5 வது இடத்தில் உள்வாங்க பட்டிருப்பதாக கேள்வியுற்றேன்.

அதனை தொடர்ந்து இளைஞர் சேவை அதிகாரி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது சரியான பதில் தரவில்லை, உதவிப் பணிப்பாளருக்கு கடிதம் மூலமாக கோரியும் எந்நவித பதிலும் இல்லை.

அதனைத் தொடர்ந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளரை நேரடியாக சந்திப்பொன்றை மேற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் பெயரை பல சிரமங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதில் என்னுடைய பெயரும் இருந்தது. புள்ளிகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் 5 ஆம் இடத்தை பெற்றதாகவும் இப் புலமைப்பரிசிலில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.!

சில நாட்களின் பிற்பாடு புள்ளிகளின் அடிப்படையில் இல்லாமல் இன விகிதாசாரப்படி தேர்வு செய்யவிருப்பதாக கேள்வியுற்றேன். ( அவ்வாறு எந்த சுற்றறிக்கைகளும் வரவில்லை )

அதன் பிற்பாடு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் காரியாலயத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலயத்திற்கு (மஹரகம) அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதில் நேர்முகத்தேர்விற்கு பங்குபற்றாத இரு சிங்கள சகோதர்களின் பெயரும் இருப்பதாக சொன்னார்கள்.
(தேர்வு செய்யப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களுடைய பெயர் இல்லை என்றும் தகவல் கிடைத்தது)

மேலும் குறித்த பெயர்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் சிலர் குறித்த புலமைப்பரிசிலுக்கு தகுதி பெறாதவர்கள் ஆவர்.

அதற்கான காரணங்களை குறிப்பிட்டு நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றையும் செய்திருந்தேன்.

தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் தகுதியற்றவர்களை
(உயர் பதவியில் உள்ள அரச உத்தியோகத்தர்களளின் அனுமதியோடு) உள்வாங்கியமைக்கும் எதிராக அக்கரைப்பற்று, சாய்ந்தமருது கல்முனை, பொத்துவில், ஆகிய இளைஞர் கழகங்களின் சம்மேளனம் இவ்வுரிமை மீறலுக்கு எதிரான முறைப்பாட்டை செய்துள்து..

மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் மிக விரைவில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார் .!

உ.மு. தில்ஷான்
முன்னாள்  இளைஞர் கழகங்களின் 
சம்மேளன தலைவர்
அக்கரைப்பற்று
நேர்முகப் பரீட்சை தொடர்பான முறைப்பாடு. நேர்முகப் பரீட்சை தொடர்பான முறைப்பாடு. Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.