கஞ்சிபானயை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிடுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானை 90 நாட்கள்
தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுனருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை அவரை எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் சிஐடி விசாரனையின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அரசியல்வாதிகள் , நடிகர்கள் , வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரின் பெயரை வெளியிட்டுள்ள இம்ரான் தனக்கு உரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படுமானால் மேலும் பல தகவல்களை கூறத் தயாரென கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானயை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கஞ்சிபானயை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.