மீண்டும் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க தயாரிப்பு போயிங் 787 விமானம்.


அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை
வெளியானதால் உடனடியாக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.

ஆவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரை நோக்கி புறப்பட்ட யுனைட்டேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 விமானத்தில் திடீரென விமானிகள் அறையில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

இதனையடுத்து விமானம் பிரன்ஸ் பசிபிக் பிராந்தியமான நியூ கலேடோனியாவிற்கு திருப்பப்பட்டு. அங்கு கட்டுப்பட்டு அறையின் அனுமதியை பெற்று உடனடியாக தரையிறங்கியது. 256 பயணிகளுடன் சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தோனேசியாவில் மற்றும்  எத்தியோபியாவில் போயிங்  737 மேக்ஸ் 8 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளன..
மீண்டும் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க தயாரிப்பு போயிங் 787 விமானம். மீண்டும் பயணிகளுக்கு  அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க தயாரிப்பு  போயிங் 787 விமானம். Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.