நாட்டில் 70 இலட்சத்திற்கு அதிகரித்து வீதிகளில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட
அதிக​ரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க இதனாலேயே இன்று வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான, வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், பொது வாகனங்களை விட தனியார் வாகனங்களே வீதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் கடும் வாகன நெருக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

 எனவே வாகன நெருக்கடியைக் குறைப்பதற்கு பொது பயணிகள் போக்குவரத்தை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 70 இலட்சத்திற்கு அதிகரித்து வீதிகளில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் 70 இலட்சத்திற்கு அதிகரித்து வீதிகளில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.