7 வகையான போக்குவரத்து குற்றஙகளுக்கான தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் வீதி விபத்தினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க முடியும்


ஏழு வகையான போக்குவரத்து குற்றஙகளுக்கான தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரிப்பதன்
மூலம் வீதி விபத்தினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க முடியும் என போக்குவரத்து சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ நேற்று(25ம் திகதி) தெரிவித்தார்.

இத்தகைய ஆலோசனை இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட போதிலும், மோட்டர் வாகனங்களுக்கான 3000 ரூபா தண்டப்பணம் மாத்திரமே அதிகரிக்க முடியுமாக இருந்தது.

முன்னர் கலந்துரையாடியதைப் போல் தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரித்திருந்தால் நியாமான அளவு வீதிவிபத்துகளை குறைத்திருக்கலாம் என குழு நிலை விவாதத்தின் போது அபேசிங்ஹ சுட்டிக்காட்டினார்.

முன்னைய முன்மொழிவு ஆலோசனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையால் பழைய நிலமை மீண்டும் தோன்றியுள்ளது.

வீதிவிபத்துகளினால் இலங்கையில் நாளாந்தம் எட்டு மனிதர்கள் மரணிக்கின்றனர். ஏழு வகையான போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதினூடாக கணிசமான அளவு  விபத்துக்களைக் குறைக்கலாம் என எண்ணுகிறோம், என்றும் குறிப்பிட்டார்.

குடி போதையில் வாகனத்தைச் செலுத்துதல்,
வாகன அனுமதிப்பத்திரம் இன்றி ஓட்டுதல்,
பொறுப்பற்ற முறையில் செலுத்துதல்,
புகையிரத கடவையினூடாக வாகனஙகளை ஓட்டிச் செல்லல் என்பனவும்  ஏழு குற்றங்களுக்குள் அடங்குபவையாகும்.

மூலம் Daily Mirror
A Raheem Akbar
மடவளை பஸார்
7 வகையான போக்குவரத்து குற்றஙகளுக்கான தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் வீதி விபத்தினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க முடியும் 7 வகையான போக்குவரத்து குற்றஙகளுக்கான தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் வீதி விபத்தினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க முடியும் Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.