கொழும்பில், அரசாங்கம் 270 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் நடைமுறைப் படுத்தும் நீர் விநியோக அபிவிருத்தி தொடர்பில் விளக்கம்.


(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்பில் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி கடன்திட்டத்தில் 270 மில்லியன்
  டொலர்   (40  பில்லியன் ருபா) செலவில்  960 கிலோ மீற்றர் வரையிலான  கொழும்பில் புதிய நவீன முறையில் பெரிய குழாய் நீர் விநியோக வலையமைப்பின்னலில் கொழும்பு நீர் விநியோகத்திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம்  60 வீதம் வரையான பழைய குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டம் 2020ல் முடிவடைகின்றது. தற்பொழுது மட்டக்குழி , கொட்டேகேன, கிராண்பாஸ் களனி, மாளிகாவத்தை போன்ற பிரதேசங்களில் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு பொதுமக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.


இத்திட்டம் கொழும்பு வடக்கு , கொழும்பு கிழக்கு என 4 தொகுதிகளாக பிரிக்க்பபட்டு இத் திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பில் 150 வருடங்களுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களினால் நீர்க்கசிவு மற்றும ;குறைந்த அழுத்தம் காரணமாக தொடர்மாடி வீடுகள் மற்றும் சன நெறிசலான பிரதேசங்களில் நீர் விநியோகத்தினை மட்டுப்படுத்தப்படுவதனை நீக்கி இப் புதிய திட்டம் அடுத்த 100 வருடங்களுக்கு கொழும்பில தக்குப்பிடிக்கும் அளவுக்கு  இத் திட்டம் கொழும்பில் அமுல்படுத்த்ப்பட்டு வருகின்றது.


மேற்கண்டவாறு இன்று(28) வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு நீர் விநியோகத்தை மேம்படுத்து திட்ட அலுவலகத்தில் அதன் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் அப்துல் ரசீத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
திட்ட முகாமையாளர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

கொழும்பில் அதிகரித்து வரும் சனத்தொகைக்கேற்ப மற்றும் புதிய கட்டிடங்கள் சுகபோக ஹோட்டல்கள் போட் சிட்டி போன்ற திட்டங்களுக்கு ஏற்ற முறையில் அதிக அழுத்தத்தில் நீரை வழங்குவதற்கு அமைச்சர் ரவுக் ஹக்கீம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் இந் நிதியைப் பெற்று இத் திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது.  இந் நகரில் வாழும் 6 இலட்சம் மக்களுக்கு வேறாக நாளாந்தம் 4 இலட்சம் மக்கள் கொழும்புக்கு வந்து போகின்றனர். 150 வருடங்களுக்கு முன்பு  பதிக்கப்பட்ட குழாய்கள் நீர்க் கசிவு சட்ட விரோத நீர் பாவனை போன்ற 41 வீதம் நீர் விரயமாகின்றது. கொழும்பை அண்டிய களனி மற்றும் அம்பேத்தல, லப்புகம , மற்றும் கட்டுவான ஆறுகளில் இருந்து கொழும்புக்கு நீர் சேகரிக்கும் பாரிய டாங்கள் ஊடகவே நீர் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் கொழும்பில் 3இலட்சம் கன மீட்டர் நீர்விநியோகிக்ப்படுகின்றது 1000 லீட்டர் 12 ருபாவுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் ஒரு லீட்டர் தன்னீர் போத்தல் 60ருபாவுக்கு விற்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் நோக்கம் கொழும்பு நகருக்குள் நீரை விநியோகிக்கும்  ஆற்றலையும் அதன் செயற்றிறனையும் மேம்படுத்துவதற்கு  அப்பால் நீர் விநியோகக் குழாய்  வலைப்பின்னலை விருத்தி  செய்து நீர் விரயமாவதால் விளையும் ஓட்டுமொத்த நஸ்டத்தினை 2020ஆம் ஆண்டளவில் குறைந்த 18 வீதத்தினை குறைப்பது சகலருக்கும் குழாய் நீர் மூலம் சீராக நீரை விநியோகிப்பதாகும்.


இதனால் குழாய் தொகுதிகள் நவீனமயப்படுதாகும். அதன் மூலம் சிறப்பான செயற்றிறன் வாய்நத தொடர்ச்சியான  நீர் விநியோகம் கிடைத்தல். ஜி.ஜ.எஸ் அடிப்படையாகக் கொண்ட தொழில் நுட்பத்தின் ஊடாக நீர்கசிவு மற்றும் தடங்களை உடனடியாக அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை விரைவாக வழங்குதல்.


நீர்மாணிகள் உரிய இடத்தில் பொருத்தப்படுவதால் மாணிகளை இலகுவாக  வாசிக்கலாம். மற்றும்  வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையுறு ஏற்படாது. தற்காலிக நீர் விநியோகத் தடை பற்றி பல்வேறு  ஊடகங்கள் வாயிலகவும் அறியத்தரப்படுதல் போன்ற விடயங்கள் அனுகூலமாக உள்ளது.

-
கொழும்பில், அரசாங்கம் 270 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் நடைமுறைப் படுத்தும் நீர் விநியோக அபிவிருத்தி தொடர்பில் விளக்கம். கொழும்பில்,  அரசாங்கம் 270 மில்லியன்   டொலர்   கடன் திட்டத்தில் நடைமுறைப் படுத்தும்  நீர் விநியோக அபிவிருத்தி தொடர்பில் விளக்கம். Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.