அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் மீட்பு.


ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.

சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த லொறியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி, பொலிஸார் சமிக்ஞையிட அதனை பொருட்படுத்தாது, லொறியை வேகமாக செலுத்திச் சென்று, இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கைவிடப்பட்ட குறித்த லொறியை சோதனையிட்ட பொலிஸார் வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் மீட்பு. அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் மீட்பு. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5