மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு சீனாவிடம் இருந்து 178 பில்லியன் ரூபா கடன் . சீனாவும் சம்மதம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு சீனாவிடம் இருந்து 178 பில்லியன் ரூபா கடன் . சீனாவும் சம்மதம்.


மத்திய அதிவேக நெடுஞ்சாலை  நிர்மாணத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ஒரு பில்லியன்
அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது இலங்கை ரூபாவில் 178 பில்லியன்களாகும்.

இந்த கடன் தொகை தாமதிக்கப்பட்டதன் காரணமாக, குறித்த நெடுவீதி நிர்மாணிப் பணிக்கான உத்தேச தொகை 12 பில்லியன் ரூபாய் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்த கடன்தொகையை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பமானது.

நாட்டின் நிதி நிலைமை, அரசியல் மற்றும் பாதகமான அறிக்கைகள் என்பன இந்த கடன்தொகை தாமதத்துக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு சீனாவிடம் இருந்து 178 பில்லியன் ரூபா கடன் . சீனாவும் சம்மதம். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு சீனாவிடம் இருந்து   178 பில்லியன் ரூபா கடன் . சீனாவும் சம்மதம். Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5