தபால் அதிபர்கள் 1000 பேரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை.


( மொஹொமட் ஆஸிக்)
பிரதான தபால்  அலுவலகங்களில்  சேவைாற்றுவதற்காக  1000 தபால் அதிபர்களை  நியமிப்பதற்கு
நடவடிக் கை  எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மற்று்ம்  முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்  தெரிவித்தார்.

  கண்டி ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பொக்காவல எனுமிடத்தில்  சதொச நிறுவனத்தின் புதிய கிழை ஒன்றை திறந்து வைத்த பின்
உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்து  தெரிவித்த அமைச்சர் ஹலீம் இவ்வாறும் கூறினார்.

அமைச்சர் பதவி என்பதைப் பற்றி மக்கள் பல விதமாக சிந்திக்கின்றனர். பேசுகின்றனர். அமைச்சர்களுக்கு  சொகுசான வாழ்க்கை  இருப்பதாக அங்கிமிங்கும் கதைகள் அடிபடுகின்றன. இருந்த போதும்  அமைச்சர் பதவி ஒன்றை பெற்ற பின்தான் தெரியும் அதன் கஷ்டத் தை.  அமைச்சர்கள் எந்த நேரத்திலும் பதில் கூற தயாராக இருக்க வேண்டும்.  சில வேவை பிரதமர் பேசுவார்   அல்லது ஜனாதிபதி பேசுவார். அதுவும் இல்லாவிட்டால். அமைச்சின் பல வேசைகள் முன் வரும அவற்றை பின போட முடியாது. அ தே நேரத்தில் முடிக்க வேண்டி வரும்  ஒரு அமைச்சர் என்ற வகையில் நான் படும் கஷ்டத்தை நன்றாக நான் உனர்ந்துள்ளேன். எனது குடும் அங்கத்தவர்களுடம் கூட பேசுவதற்கு  நேரம் கிடைப்பது இல்லை'


2015 ம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பாரிய சேவையயாற்ற முன் வந்த போதும்  எங்களுடன் ஒன்று சேர்ந்தவர்கள் அதற்கு  ஒத்துழைப்பு வழங்க வில்லை.  அதனால் நாங்கள் எதிர்பார்த்த சேவை மக்களுக்கு வழங்க முடியவில்லை. தற்போது நாங்கள் தனி அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம் எனவே மக்களின்  தேவைகளை கண்டறிந்து சேவை புறிந்து வருகினறோம்.


தற்போது எங்களுக்கு உள்ள பாரிய பிரச்சினை இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாகும். அதற்கும் நாங்கள் தற்போது பல திட்டங்களை ஆரம்பிததுள்ளோம்.


வரவு  செலவுத்  திட்டம் நிறைவடைந்ததன் பின் அது ஆரம்பிக்கப்படும்.

எனது அமைச்சின் கீழுள்ள தபால் தினைக்களத்திற்கு 1000 தபால் அதிபர்களை வரவு செலவுத் திட்டத்தின் பின் சேர்த்துக் கொள்ள நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

கபொத சா/த உ/த பரீட்சைகளில் சித்தியடைந்தவர்கள் மத்தியில் போட்டிப் பரீட்சை ஒன்றை நடாத்தி இப் பதவிகளுக்கு  சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்றும்

அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் புஜாபிட்டிய பிர தேச சபையின் எதிர்கட்சி தலைவர் எம்.பீ. ரம்சான் உற்பட பலர் கலந்து கொண்டனர்,
2019 03 16 ஆஸிக்
தபால் அதிபர்கள் 1000 பேரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை. தபால் அதிபர்கள் 1000 பேரை  சேர்த்துக் கொள்ள நடவடிக்கை. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5