இலவச செயலமர்வு, பதிவுகளுக்கு முந்திக் கொள்ளவும். "அரசியலமைப்புச் சட்டமும் இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலமும்"


கோல்புரூக், சோல்பரி, டொனமூர் அரசியலைப்புச் சட்டயாப்பின் கீழ் சுதந்திரத்திற்கு முன்னைய இலங்கை  காணப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்னர் 23  வருடங்கள் தனித்துவமாக வரையப்படாத யாப்பின்றி  நாடு ஆளப்பட்டாலும் 1972ல் முதலாவது யாப்பு வரைப்பட்டுது.ஆறு வருடத்தில் அதுவும் வழக்கிழந்து போக, 1978ல் புதிய யாப்பு உதயமாகியது.அன்று தொட்டு இன்று வரை அந்த யாப்பு மாற்றங்களுடன் (Amendment) நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த யாப்பின் சாதக பாதகங்கள் தொடர்பாக காலகாலமாக பேசப்பட்ட போதிலும் ஏற்படும் மாற்றங்களில் நன்மை தீமைகள் தொடர்பாக அறிந்திருத்தல் காலத்தின் தேவை என்பதை உணரவேண்டும்.

'த யங் பிரண்ட்ஸ்' கண்டி ( The Young Friends) அமைப்பு " அரசியலமைப்பு வரைபும் இலங்கை முஸ்லிம்களும்" எனும் தொனிப்பொருளில் விஷேட விளக்கவுரைக் செயலமர்வு ஒன்றை இம்மாதம் 17ம் திகதி ஞாயிறுக் கிழமை ஏற்பாடுசெய்துள்ளது.

சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீத் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.இதில் கல்விமான்கள்,ஆசிரியர்கள்,சமூக நலன் ஆர்வளர்கள், மாகாண சபை, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள், கலந்து கொள்ளவது வரவேற்கத்தக்கது. அவ்வாறு, கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0770177418 என்ற இலக்கத்திற்கு உங்களது பெயர், ஊர் என்பவைகளை குறுஞ் செய்தி (SMS) அல்லது வாட்சப் (Whats App) மூலம் அனுப்பி உங்களுக்கான ஆசனத்தை ஒதுக்கீடு செய்து கொள்ளவும்.அதன் பின்னர் நேரம், இடம் என்பன தனிப்பட்ட ரீதியாக அறிவிக்கப்படும்.

A Raheem Akbar
மடவளை பஸார்
2019/02/11
இலவச செயலமர்வு, பதிவுகளுக்கு முந்திக் கொள்ளவும். "அரசியலமைப்புச் சட்டமும் இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலமும்" இலவச செயலமர்வு, பதிவுகளுக்கு முந்திக் கொள்ளவும். "அரசியலமைப்புச் சட்டமும் இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலமும்" Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.