(Video) தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியே சென்ற இளைஞன் இரு நாட்களின் பின் மீட்கப்பட்டது இவ்வாறு தான்.


தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியே சென்ற இளைஞன் மீட்கப்பட்டது இவ்வாறு தான்.

மஸ்கெலியா நகரில் கடந்த 19 ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்த இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசித்து வந்த 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற  இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

அந்தநேரத்தில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இளைஞனின் பாதணி ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணி தொடர்ந்தது.

நேற்று இரவு வரை தேடுதலில் ஈடுப்பட்டிருந்த பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினரும் இன்று காலை கடற்படையினரின் உதவியைக்கொண்டு தேடுதலில் ஈடுப்பட்ட போது இளைஞன் சடலமாக நீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்டார்.

19ம் திகதி இரவு குறித்த இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என பெற்றோரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டையடுத்து, சந்தேகிக்கும் காவல்துறையினர் மேற்படி இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்துள்ளாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா என்ற பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொகுக்கபட்ட வீடியோ 
https://youtu.be/V0mrBI78__0
(Video) தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியே சென்ற இளைஞன் இரு நாட்களின் பின் மீட்கப்பட்டது இவ்வாறு தான். (Video)  தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியே சென்ற இளைஞன் இரு நாட்களின் பின்  மீட்கப்பட்டது இவ்வாறு தான். Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.