பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயார் : சல்மான் To மோடி


பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத்
தயாராகவுள்ளதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் நேற்றுமுன்தினம் மாலை இந்தியாவுக்கு சென்றிருந்தார்.

டெல்லி வந்திருந்த அவரை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்பு நிகழ்வாக, மரபை மீறி விமான நிலையகத்துக்கு சென்று  வரவேற்றார்.

மேலும் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சம்பிரதாய ரீதியிலான வரவேற்பும் நேற்று அளிக்கப்பட்டது. இதில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது உரையாற்றிய இளவரசர் முகமது சல்மான், “இரு நாடுகளும் மிகப்பழமையான உறவுகளை வைத்துள்ளோம். இன்று (நேற்று) நம் இரு நாடுகளின் நலன்களையொட்டி, அந்த உறவு தொடர்ந்து நீடிக்கவும், வலுப்படுத்தவும் உறுதிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.


இந்தியாவுக்கும், சவுதி அரேபியா 80 சதவீதம் பங்களிப்பு செய்யும் அரேபிய தீபகற்பத்துக்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வரலாறு எழுதப்படுவதற்கு முன்பே உறவு உண்டு” என குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது, இந்திய சவுதி அரேபிய இராணுவ உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றன.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களை உடனான சந்திப்பின்போது கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர்,

“கடந்த வாரம் புலவாமாவில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், உலகளாவிய மனிதநேயமற்ற ஆபத்தின் அடையாள சின்னம். பயங்கரவாதத்துக்கு எந்த வகையிலான ஆதரவையும் வழங்குகிற நாடுகளுக்கும் நிர்ப்பந்தம் தருவது அவசியம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என கூறினார்.

தொடர்ந்து, “பயங்கரவாத கட்டமைப்புகளை கலைப்பது, பயங்கரவாத ஆதரவை ஒழிப்பது, பயங்கரவாதிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிப்பது மிகவும் அவசியமான ஒன்று” என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதன்போது முகமது பின் சல்மான் பேசும்போது,

“பயங்கரவாதத்தை பொறுத்தமட்டில் பொதுவான கவலை உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில், உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் தருவோம் என்று இந்தியாவுக்கு கூறிக்கொள்கிறேன். இந்தியாவோடு மட்டுமின்றி அண்டை நாடுகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அப்போதுதான் இனிவரும் தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை நாம் உறுதி செய்ய முடியும்” என்று கூறினார்.

மேலும் இந்த விஜயத்தின்போது, இந்தியாவுக்கும் சவுதி அரேபியாகவுக்குமிடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயார் : சல்மான் To மோடி பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயார் : சல்மான்  To மோடி Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.