பறகஹதெனிய ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கு ( SLAS) தெரிவானார்.


-இக்பால் அலி-
பறகஹதெனியவையைச் சேர்ந்த கிதுமத்துல்லாஹ் ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கான ( SLAS)
எழுத்துப் பரீட்சையிலும்  நேர்முகப் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார். இவர் ஆறாவது இடத்தில்  தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.


ஆரம்ப கல்வி முதல் க. பொ. த சாதாரண தரம் வரையிலும் பறகஹதெனிய தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். பின்னர் க. பொ. த உயர்தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று ரஜரட்ட பல்கலைக்கழகம் சென்று தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்றவர்.


இப்பாகமுவ மத்திய கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றிய இவர் பள்ளிக் கூடப் பருவத்தில்  அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் கட்டுரைப் பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றவர்.


இவர் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா நிறுவனத்தின் நிதி செயலாளராகக் கடமையாற்றும்  எம். எம். கிதுமத்துல்லாஹ் மற்றும் நஸீமா தம்பதிகளின் புதல்வியுமாவார்.

இக்பால் அலி
பறகஹதெனிய ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கு ( SLAS) தெரிவானார். பறகஹதெனிய ருஸ்தா இலங்கை  நிர்வாக சேவைக்கு ( SLAS) தெரிவானார். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.