அஷ்ஷைக் முஹ‌ம்ம‌து சலீம் அலா அஹ்மத் (நளீமீ) AGA நியமனத்திற்குத் தகுதி பெற்றார்.


அஷ்ஷைக் முஹ‌ம்ம‌து சலீம் அலா அஹ்மத் (நளீமீ) இலங்கை நிர்வாக சேவைக்கான (SLAS) எழுத்துப்
பரீட்சையிலும் நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்து இறைவன் உதவியால் நியமனத்துக்குத் தகுதி பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.


இவர் மன்னார் மாந்தை மேற்கு பெரியமடுவைப் பிறப்பிடமாக்கக் கொண்டவரும் முஹம்மத் ஸலீம் ஸமீனா ஆசிரியை ஆகியோரது முதல் செல்வப் புதல்வருமாவார். தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் கல்லூரியில் கற்றதோடு ஷரீஆ கல்வியை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் கற்று பட்டம் பெற்று வெளியேறிய நளீமிய்யா பட்டதாரியுமாவார்.


பாடசாலையில் கற்ற வேளையில் கற்றல், விளையாட்டு, போட்டிகள் மற்றுமுண்டான பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய பன்முக திறமையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூறுமிடத்து இவர் புத்தளம் ஹுஸைனியாபுரத்தில் இயங்கிவரும் YASA சமூக அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சமூக சேவையாளராக செயற்படும் அதே வேளை சிறந்த உதைப்பந்தாட்ட வீரருமாவார்.


இவர் மன்னார் பெரியமடுவில் கிராம சேவகராக பணியாற்றி வரும் வேளையில் SLAS பரீட்சைக்குத் தோற்றி AGA நியமனத்திற்குத் தகுதி பெற்றிருக்கும் இத்தருணத்தில் முதலில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வதுதோடு எமது உளப்பூர்வமான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


மென்மேலும் பல அடைவுகளும் சாதனைகளும் புரிந்து வெற்றிவாகை பல சூடி சமூகத்திற்கு தொண்டு செய்யும் நல் வாழ்வை வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக.

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா (பெரியமடுவான்)
14/02/2019
அஷ்ஷைக் முஹ‌ம்ம‌து சலீம் அலா அஹ்மத் (நளீமீ) AGA நியமனத்திற்குத் தகுதி பெற்றார். அஷ்ஷைக் முஹ‌ம்ம‌து சலீம் அலா அஹ்மத் (நளீமீ) AGA நியமனத்திற்குத் தகுதி பெற்றார். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5