சீதனப் பிச்சைகாரர்களது பேராசை குறைந்தபாடில்லை...சீதனக் கொடுமையால் அவதியுறும் பெற்றோர்!

சென்ற வியாழக்கிழமை எமது காரியாலயத்திற்கு ஓர் அழைப்பு (Call) வந்தது, Call க்கு பதிலளித்த போது அங்கே கணவனை இழந்த ஒரு தாய் தனது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பதற்காக சீதனத் தொகை ஏதேனும் வழங்கியுதவுமாறு கேட்டது எமது காரியாலயத்திலுள்ள அனைவரையும் ஒரு கனம் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

சீதனப் பிச்சைகாரர்களது பேராசை குறைந்தபாடில்லை என்பதை இத்தாயின் ஆதங்கப் பேச்சிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.


சீதனைப் பிச்சை தந்தை உயிரோடு இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பெரும்பாடு எனில் தந்தையை இழந்து தவிக்கும் பெண் பிள்ளைகளது நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்! 


ஆணாதிக்கம் என்பது இச்சீதனப் பிச்சையில் தான் தெளிவாக வெளிப்படுகிறது, பல குமரிப் பெண்கள் திருமணம் முடிக்காமல் பாவத்தில் வாழ்வதற்கும் அவர்களது கண்ணீருக்கும் எம் சீதனப் பிச்சைக்காரர்களே காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

வரவிருக்கும் மனைவிக்காக தன்னை பேரம்பேசி விலைக்கு விற்கும் வழிகேட்டிலிருந்து வல்ல அல்லாஹ் எமது இளைஞர்களைப் பாதுகாப்பானாக!


நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
10/02/2019
சீதனப் பிச்சைகாரர்களது பேராசை குறைந்தபாடில்லை... சீதனப் பிச்சைகாரர்களது பேராசை குறைந்தபாடில்லை... Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5