கனடா பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.


கனடாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பள்ளிவாசலில்  புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி
6 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி மாலை தொழுகை நடைபெற்றபோது, நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டினால் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 துப்பாக்கி சூடு நடத்திய   குறித்த நபரை பொலிஸார்  பிடித்து விசாரணை நடத்தினர் இந்நிலையில் விசாரணையில் மூலம் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது.

குறித்த நபர் மீது கியூபெக் சிட்டி நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டது

 இந்நிலையில்,விசாரணையின் முடிவில் 29 வயதான அலெக்சாண்டர்  பிசோனெட் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பிணை பெற முடியாது என உத்தரவிட்டுள்ளார். 

Ibrahima Bary (age 39),
Mamadou Tano Bary (age 42),
Khaled Belkacem (age 60),
Abubaker Thabt (age 44),
Abdelkrim Hasane (age 41)
Azedine Soufine (age 57)

ஆகியோரே கொல்லபட்டவர்கள்.
கனடா பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது. கனடா பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.