மாவனல்லை சம்பவத்தோடு தொடர்புடைய விடயங்களை வெளியிட்டால் அது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய யூகங்கள் தலைதூக்குவதை தடுக்கும்.


-லத்தீப் பாரூக் -
மாவனல்லையில் புத்தர் சிலை தாக்கப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம்; எதிர்பாராத ஒன்றல்ல.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடக் கூடிய இவ்வாறான சம்பவம் இந்த நாட்டில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் ஒன்று திரண்டிருக்கும் பின்னணியில் சாத்தியமான ஒன்றே.


2018 அக்டோபரில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் உலகளாவிய தீய சக்திகளுக்கு இந்த நாட்டின் கதவுகளை திறந்து விட்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை காரணமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த தீய சக்திகள் உலகம் முழுவதும் ஊடுறுவி ஆக்கிரமித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நாசப்படுத்தி சின்னாபின்னமாக்கி லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தும் வருகின்றன.


பத்து முஸ்லிம் நாடுகளை நாசப்படுத்தி மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று இன்னும் பல மில்லியன் முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றி அந்த முஸ்லிம்களை எந்தளவு மோசமான நிலைக்கு இந்த தீய சக்திகள் தள்ளியுள்ளன என்று நான் அதில் விளக்கி இருந்தேன். அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல், சீனா, இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகத் தான் இந்த தீய சக்தி உருப்பெற்றுள்ளது. இந்த நாடுகள் தமது நாட்டு முஸ்லிம்களை கொடுமை படுத்தி வருகின்றன. இவர்களுக்கு பக்கபலமாக அவர்களின் சவூதி மற்றும் அபுதாபி உற்பட்ட அரபுலக கொடுங்கோல் ஆட்சியாளர்களும் உள்ளனர்.



இதில் குறிப்பாக இஸ்ரேலும் இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் பிரதான அங்கமான ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி உம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குடைய அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று அவர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றனர். விஎச்பி வவுனியாவில் ஒரு கிளையையும் திறந்துள்ளது. சில தமிழ் கூலிப்படையினர் மட்டக்களப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர்களின் கொடிகளைத் தாங்கியவாறு முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் அண்மைக் காலத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கை சிவசேனாவின் தலைவர் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் பெடரல் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மரவன்புலவு சச்சிதானந்தன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனோடு இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆடுகள் அறுக்கப்படுவதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


முஸ்லிம் தமிழ் உறவுகளை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அறிவுபூர்வமான தமிழ் மக்கள் ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டனர்.
நாட்டில் இவ்வாறான சக்திகளின் பிரசன்னம் அழிவுக்கே வழியமக்கும். அவர்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள், புத்திஜீவிகள் என பல்வேறு தரப்பினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக மூளைச்சலவை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.



இன்று இந்த நாட்டில் அரசியல் தலைமைகளாலும், சமயத் தலைவர்கள் என தம்மை அழைத்துக் கொள்பவர்களாலும் துரோகம் இழைக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு, வழி கெடுக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலையில் இன்று உள்ளது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது அரசாங்கமும் பாரபட்சம் காட்டி வருகின்ற நிலையில் இன்றைய நிலை மிகவும் ஆபத்தானதாகும். ஏற்கனவே அம்பாறை, திகன, அக்குரண போன்ற இடங்களில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இந்த அரசாங்கம் தனது கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்தி உள்ளது.



முஸ்லிம்கள் இந்த தீய சக்திகளுக்கு தமது அரசியல் தலைமைகளுக்கும் மற்றும் மார்க்கத் தலைமைக்கும் இடையில் சிக்கி நசுங்கிப் போன நிலையில் உள்ளனர். முஸ்லிம்களின் சமய ரீதியான தலைமையை ஏற்றுள்ள அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரதூரமான சவால்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. மாறாக அதன் மீது பல ஊழல் குற்றச்சாடடுக்கள் வேறு காணப்படுகின்றன.



இலங்கைப் பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தமது பதவிகளிலும் சலுகைகளிலும் மட:டுமே கவனம் கொண்டுள்ளனர். சமூகம் முகம் கொடுத்துள்ள கொழுந்து விட்டெறியும் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போலன்றி தமிழ் அரசியல் வாதிகள் பட்டம் பதவிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு தமது சொந்த சமூகத்தின் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அரசை ஆதரித்து வருகின்றனர்.



இவ்வாறான ஒரு பின்னணியில் தான் அதிர்ச்சி ஊட்டும் வகையில் மாவனல்லை சம்பவம் பற்றி கேள்வியுற முடிந்தது. இதனிடையே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தச் சேர்ந்த பொறியியல் பிரிவு மாணவர்கள் குழுவொன்று ஒரு வருடத்துக்கு முன் கிரலாகல தூபிக்கு மேல் ஏறி புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த விடயமும்; ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரது கருத்துப்படி இந்த இடத்தில் அது ஒரு தொல்பொருள் இடம் என்றோ, சமய முக்கியத்துவம் மிக்க இடம் என்றோ அல்லது புனித இடம் என்றோ கூறும் எந்தவொரு அறிவிப்பும் அங்கு இல்லாத நிலையிலேயே இந்த மாணவர்கள் அதில் ஏறி படம் எடுத்துள்ளனர். பௌத்த உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது. ஒரு வருடம் பழமையான இந்த விடயம் மாவனல்லை விடயத்தோடு சேர்த்து ஏன் கிளப்பப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வி. சிங்கள முஸ்லிம் முறுகல் நிலை ஒன்றை ஏற்படுத்துவதுதான் இதன் பின்னணி நோக்கமா?


இலத்திரனியல் ஊடகங்களின் கருத்துப்படி இந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக திகனயிலும் ஏனைய இடங்;களிலும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்கள் எதையும் கூற அவர் மறந்து விட்டார்.


இதனிடையே புத்தளம் பகுதியில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் மீற்கப்பட்டுள்ளன. அதேபோல மாவனல்லை சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரின் தந்தையின் வீட்டில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தப் பின்னணிகளின் உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவின் பேரால் இந்த மர்மங்கள் அவிழ்க்கப்பட்டு உண்மைகள் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படுவதன்; மூலம் இனவாத சக்திகள் இந்தச் சம்பவங்களை தமக்கு சாதகமாக்கி தவறாகப் பயன்படுத்தி தமது தீய நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற விடாமல் தடுக்க முடியும்.



முஸ்லிம் முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு குழு ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்து இந்த உண்மைகளை வெளியிடுமாறு கேட்டுள்ளது. அதேவேளை அமைச்சர் கபீர் ஹாஷிம் சரியான நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



சில தகவல்களின் பிரகாரம் மாவனல்லைச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சில முஸ்லிம் நபர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்போடு தொடர்புடையவர்கள் என்றும் தெரிவந்துள்ளது. இந்த இயக்கம் மாபெரும் இஸ்லாமிய அறிஞரான மௌலானா செய்யித் அபுல் ஆஃலா மௌதூதி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். புத்தி ஜீவிகளை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அறிவை பகிர்ந்து கொள்வது தான் இந்த இயக்கத்தின் பிரதான குறிக்கோள். ஆனால் இந்த இயக்கத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.



மாவனல்லை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாகக் கருதப்படும் தற்போது தலைமறைவாகி உள்ள இரண்டு நபர்களின் (சகோதரர்கள்) தந்தையும் பெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீட்டில் இருந்து சில ஆயுதங்கள் மீற்கப்பட்ட பின்னரே அவர் கைதாகி உள்ளார். ஆனால் இந்தக் குற்றச்hட்டை பிரதேச மக்கள் மறுக்கின்றனர். இந்த ஆயுதங்கள் எவ்வாறு அங்கு வந்தன என்பது பற்றி அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலைகளை குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் சேதமாக்கி இருக்கமாட்டார்கள். அதன் பாரதூரம் என்னவென்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த இளைஞர்கள் மிகவும் அமைதியானவர்கள் என்றும் அவர்கள் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று எண்ணிக் கூடப் பார்க்க முடியாது என்றும் பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர்.


அதேவேளை இந்த இளைஞர்கள் ஒரு விரிவான வலையமைப்பின் கீழ் செயற்படுகின்றவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வாறான குற்றங்களைப் புரியும் விதத்தில் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.


அப்படியானால் யார் இவர்களை முளைச் சலவை செய்தது. அவர்கள் எவ்வாறு இவ்வாறான ஒரு வலையில் வீழ்ந்தார்கள் என்பதே முக்கியமான கேள்வி.


இந்தப் பிரதேச மக்கள் இப்போது குழப்பமும் அச்சமும் அடைந்துள்ளனர். இன வன்முறையை தூண்டி விடுவதற்கான ஒரு திட்டமிட்ட சதி வலையாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். அண்மையில் இனவாதம் மீண்டும் தலைத}க்குகின்றது என்று பாhளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில் இதுவும் அவ்வாறான ஒரு சதித்திட்டமா என்றும் மக்கள் நோக்குகின்றனர்.



நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தீய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற இங்கே தேவையான அளவு கைக் கூலிகள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிட அவர்கள் காத்திருக்கின்றனர். பணத்துக்கு முன்னே சமயம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் அனைத்தும் மங்கிப் போகும் ஒரு யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
இதனால் தான் அறிவு சார்ந்த முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத ஏனையவர்களும் பௌத்தர்களும் மற்றவர்களும் மாவனல்லை விடயம் தொடர்பான சகல உண்மைகளும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இன்று நாட்டில் நிலவும் குழப்பகரமான அரசியல் சூழலில் அரசியல்வாதிகள் இந்த நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



முஸ்லிம் சமூகம் தங்களுக்கு எதிரான சதிகளையும் அவற்றை அரங்கேற்ற காத்திருக்கும் சக்திகளையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்ப நிலையில் உள்ளது.


இந்த நிலைமையின் பாரதூரத் தன்மையைப் புரிந்து கொண்டுள்ள சில முஸ்லிம் போதகர்கள் முஸ்லிம்களை ஐக்கியப் படுமாறு போதித்து வருகின்றனர். அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இஸ்லாத்துக்குள் திரும்பி வருமாறும்; அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையை பின்பற்றுமாறும் போதனை செய்து வருகின்றனர். இன்று முஸ்லிம்கள் இந்த இரண்டில் இருந்தும் விலகிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நாட்டில் ஒரு சிறிய சிறுபான்மையினராக முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தமக்கிடையே பல்Nவுறு கூறுகளாகப் பிளவு பட்டுள்ளனர். எல்லோரும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகவே கூறுகின்றனர். ஆனால் அவர்களின் வழிமுறைகள் அடிப்படை இஸ்லாமியக் கொள்கைகளில் இருந்து பிளவு பட்டதாகவே உள்ளது.



நழீமியா இஸ்லாமிய கல்விக் கூடத்தைச் சேர்ந்த ஷேக் அகார் முஹம்மத் முஸ்லிம்களை ஐக்கியப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார். சமூகத்தின் இன்றைய மோசமான நிலைமையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர் சமூகத்தில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதை ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.


இன்னொரு போதகர் யூசுப் முப்தியும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த சமூகம் இஸ்லாத்தைக் கைவிட்டு விட்டது. இஸ்லாமிய போதனைகளில் இருந்து அது விலகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர் இஸ்லாத்தின் பால் இந்த சமூகம் மீண்டு வந்து அது இழந்த கௌரவத்தையும் சமாதானத்தையும் மீள நிலைநாட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார். முஸ்லிம்கள் சொல்லாலும் செயலாலும் முஸ்லிம்கள் ஆக வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.



இதேவேளை பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் இனவாத அரசியலின் விளைவாகத் தான்;, இஸ்லாம் - ஐக்கியம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் சுயநலவாத முஸ்லிம் அரசியலின் ஊற்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பிறந்தது. இந்தக் கட்சியின் ஆரம்பத்திலேயே இஸ்லாம் மறைந்து விட்டது. இன்று அதிலிருந்து ஐக்கியமும் சிதைந்து போய் ஐக்கியம் என்பது அங்கே ஒரு வெற்கக் கேடான சுலோகமாக மாறி சிங்களத் தலைவர்களின் தேவைக்காகவும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துப் போகக் கூடியதாகவும் பல குழுக்கள் உருவாகி உள்ளன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதிலிருந்து பிரிந்து சென்றுள்ள குழுக்களும் கூட சமூகத்தை அடகு வைத்து தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இஸ்லாத்தைப் பயன்படுத்தி வருகின்றன.



முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் இன்றைய நிலைமைகளால் குழப்பமடைந்துள்ளன. என்ன செய்வது என்று தெரியாமல் பலவீனம் அடைந்து குறிக்கோள் இன்றி காணப்படுகின்றன. சமூகத்துக்கு தலைமை தாங்க வேண்டிய விடயத்தில் பெரும் பங்காற்ற வேண்டிய உலமா சபை சமூகத்தில் படித்த மட்டத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் அதன் கௌரவத்தையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கின்றது.
உலமா சபை சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வில்லை என்று அண்மையில் பௌத்த பிக்கு ஒருவரே தெரிவித்துள்ளார். இது உலமா சபை மீதான பாரதூரமான குற்றச்சாட்டாகும். சமூகத்தின் கௌரவத்தைப் பெற்றவர்களால் மீள் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய நிலையில் உலமா சபை உள்ளது. சமூகத்தின் இன்றைய தேவைகளைக் கருத்தில் கொண்டு உலமா சபை உயிர்ப்போடு பணியாற்ற வேண்டிய காலம் இது. அவர்கள் பெற்றோ டொலர் இஸ்லாமிய போதனைகளை விட்டு விட்டு உண்மையான இஸ்லாத்தைப் போதிக்க வேண்டிய காலம் இது.



ஆனால் துரதிஷ்டவசமாக இந்தக் கோரிக்கைகள் யாவும் உலமா சபை மற்றும் சிவில் அமைப்புக்களைப் பொருத்த மட்டில் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளன. ஆனால் நாடு முழுவதும் சில இளைஞர் குழுக்கள் இளைய தலைமுறையின் ஒட்டு மொத்த நிலைமைகளை மேம்படுத்துவதற்காக கல்வி ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கேள்வியுறும் விடயங்கள் சற்று ஆறுதல் அளிப்பவையாக உள்ளன.



கின்தோட்டை, அம்பாறை, திகண மற்றும் அம்பாறை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாக்களித்த படி முஸ்லிம்களைக் காப்பாற்றத் தவறி விட்டனர் என்பதை சமூகத்தில் உள்ள பல்Nவுறு தரப்பினரும் புரிந்து கொண்டனர். இந்தத் தாக்குதல் பற்றி முன்னரே அறிந்திருந்தும் கூட பொலிஸார் தாக்குதல் காரர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தனர் என்பதையே உள்ளுர் ஊடகங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. கும்புக்கன்துரை என்ற இடத்தில் விஷேட அதிரடிப் படையினர் சப்பாத்துக்களுடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்த இமாமையும் முஅத்தினையும் வெளியே இழுத்து வந்தனர். ஒரு பௌத்த துறவியின் முன்னாள் அவர்களைக் கொண்டு வந்து தள்ளி விட்டனர். அதேவேளை காயம் அடைந்த முஸ்லிம்களுக்கு தெல்தெனியா வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்க ஒரு வைத்தியர் மறுத்து விட்டார்.


இந்த எல்லா அட்டூழியங்களுக்கு மத்தியிலும் கூட முஸ்லிம் அரசியல் வாதிகளோ அல்லது உலமா சபையோ சமூகத்தைக் காப்பாற்ற ஒன்று சேரவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர்களில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க கூடிய எந்தத் திட்டமும் கூட அவர்களிடம் இல்லை. பெரும்பாலும் அவர்கள் முஸ்லிம்கள் மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்படும் வரை காத்திருக்கின்றனர் போலும் அறிக்கைகளை வெளியிட.
தற்போது நாடு தோதல் ஒன்றை சந்திக்க வேண்டி உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பின் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதை வழங்கக் காத்திருக்கின்றது என்பது எவருக்கும் தெரியாது. அதிலும் குறிப்பாக உலகளாவிய இஸ்லாம் முஸ்லிம் விரோத சதியாளர்கள் இங்கு ஒன்று கூடியுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு என்ன காத்திருக்கின்றது என்பது தெரியவில்லை.

(முற்றும்)
மாவனல்லை சம்பவத்தோடு தொடர்புடைய விடயங்களை வெளியிட்டால் அது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய யூகங்கள் தலைதூக்குவதை தடுக்கும். மாவனல்லை சம்பவத்தோடு தொடர்புடைய விடயங்களை வெளியிட்டால் அது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய யூகங்கள் தலைதூக்குவதை தடுக்கும். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.