மாற்றுத்திறனாளி முகம்மட் அலிக்கு ஓட்டமாவடியில் பிரமாண்ட வரவேற்பு.(படங்கள்)



(எச்.எம்.எம்.பர்ஸான்) 
வவுனியாவைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முகமட் அலி என்பவர் இன நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு
வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை வலியுறுத்தியும், சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதையும்  சுற்றிவரும்  பயணத்தை (01) வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து இன்று ஓட்டமாவடியை வந்தடைந்தார்.

மாற்றுத்திறனாளியான முகம்மட் அலியின் இவ் முயற்சியை ஊக்கப்படுத்தும் முகமாக ஓட்டமாவடியில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று (10) மாலை இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையாத்திற்கு முன்பாக கூடியா விளையாட்டுக் கழகங்கள், ஆட்டோ சங்கங்கள், பொது அமைப்புக்கள் என ஒன்று கூடி முகம்மட் அலியை மாலை அணிவித்து, பட்டாசு கொளுத்தி, பொன்னாடை போர்த்தி ஊர்வலமாக ஓட்டமாவடி பிரதேச சபை வரை இட்டுச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முகம்மட் அலியை அங்கு கூடியிருந்த பிரதேச பொதுமக்கள் மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

இதில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















மாற்றுத்திறனாளி முகம்மட் அலிக்கு ஓட்டமாவடியில் பிரமாண்ட வரவேற்பு.(படங்கள்) மாற்றுத்திறனாளி முகம்மட் அலிக்கு ஓட்டமாவடியில் பிரமாண்ட வரவேற்பு.(படங்கள்) Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.