ஐக்கிய தேசிய கட்சி MP தாக்குதல் ; பொலிஸ் கான்ஸ்டபல் வைத்தியசாலையில்..

ஐக்கிய தேசிய கட்சியின்  பதுளை மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின்
 தாக்குதல் காரணமாக  பொலிஸ் கான்ஸ்டபல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சமிந்த விஜேசிறி சென்ற வாகனத்தை முந்தி செல்ல பொலிஸ் வாகனம் முற்பட்ட போது ஏற்பட்ட வாய் தர்கத்தை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின்  பதுளை மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸ் கான்ஸ்டபில் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகன சாரதி பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி MP தாக்குதல் ; பொலிஸ் கான்ஸ்டபல் வைத்தியசாலையில்.. ஐக்கிய தேசிய கட்சி MP தாக்குதல் ; பொலிஸ் கான்ஸ்டபல் வைத்தியசாலையில்.. Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5