(படங்கள்) இன நல்லுறவு - சுத்தமான சூழல் நோக்காக கொண்டு மடவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம்.


 இன நல்லுறவு , சமாதானம், சுத்தமான  சூழல் என்பவற்றை  நோக்காக கொண்டு மடவளையில் இன்று
ஞாயிறு காலை உரை நிகழ்ச்சி , சுத்தம் தொடர்பான  சிறுவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும்   சிரமதான நிகழ்வு ஒன்று இன்று காலை மடவளையில் இடம்பெற்றது.

மடவளை மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வை மடவளை ஜும்மா பள்ளிவாயல், மடவளை பெளத்த விகாரை விகாராதிபதி சாசன ரத்ன தேரர், வத்தேகம போலிஸ் மற்றும் சூழல் ஆர்வலர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்.

சுகாதாரம் மற்றும் சுத்தம் பற்றிய உரைகள் தேரர் மற்றும் பள்ளி நிர்வாக தலைவரால் நிகழ்த்தபட்டு  சிறுவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும்   சிரமதான நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது .

இந்நிகழ்வின்  படங்களை பார்க்க Click Here 
(படங்கள்) இன நல்லுறவு - சுத்தமான சூழல் நோக்காக கொண்டு மடவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம். (படங்கள்)  இன நல்லுறவு - சுத்தமான  சூழல் நோக்காக கொண்டு மடவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம். Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5