சூடு பிடித்துள்ள பாதாள உலகக் குழு மோதலும், போதை பொருள் விவகாரமும். தற்போது வரையான அப்டேட்கள்.


கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷ் தொடர்பில் முன்னெடுக்கப்படும்
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கையிலிருந்து டுபாய் செல்லவுள்ள விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்ப பிரிவு, தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படைப்பிரிவு ஆகிய பிரிவின் அதிகாரிகள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் குழு, பெரும்பாலும் ஐந்து அல்லது ஆறு பேரைக் கொண்டதாகும் என காவல்துறை விசேட அதிரடிப்படைப் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், இந்த விசாரணைக் குழுவுக்கு டுபாய் செல்லவதற்கு அந்நாட்டு அதிகாரிகளினால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துபாயில் இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள தூதரக காரியாலயம் ஊடாக தேவையான தலையீடுகளை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த இலங்கையர்கள், உள்நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் தேடப்படுபவர்களாக உள்ளமையால், இதனை விசேட நிலைமையாக கருத்திற்கொண்டு செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் விவகார பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்றைய தினம் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளான பாதாள குழுத் தலைவரான கஞ்சிபான இம்ரானின் மற்றுமொரு மனைவி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை - மெல்வத்த - மைத்ரிபோதி மாவத்தையில் வீட்டில்   வைத்து நேற்று இந்தத் துப்பாக்கித் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிள் வந்தவர்களால்  இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மருதானை – தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சொகுசு காரில்  பயணித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்குளியைச் சேர்ந்த அவர்களைக் கைதுசெய்ய காவல்துறை குழுவினர் அங்கு சென்றுள்ளனர் என்றும் மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை மருதானை மேம்பாலத்தில் மோதி குறித்த சொகுசு கார்  விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, குறித்த மகிழூர்தியிலிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான 68 கிலோ கேரள கஞ்சா காவவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கார் வெளிநாட்டில் தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சவரின் சகோதரர் வாடகைக்கு அதனை கொடுத்த நிலையில் வாடகைக்கு பெற்றவர்கள் காரில் கஞ்சா கடத்தி உள்ளனர். அதன்போதே விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
சூடு பிடித்துள்ள பாதாள உலகக் குழு மோதலும், போதை பொருள் விவகாரமும். தற்போது வரையான அப்டேட்கள். சூடு பிடித்துள்ள பாதாள உலகக் குழு மோதலும், போதை பொருள் விவகாரமும். தற்போது வரையான அப்டேட்கள். Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.